நீலி பெருந்தேவி சிறப்பிதழ்

அன்பு ஆசிரியருக்கு,

இந்த நவம்பர் 2024 இதழ் பெருந்தேவி சிறப்பிதழாக வந்துள்ளது. எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பெருந்தேவியின் நண்பர்கள் பங்களித்துள்ளார்கள்.

மூச்சே நறுமணமானால் மொழிபெயர்ப்பு குறித்து கவிஞர் க. மோகனரங்கன் எழுதியுள்ளார். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பெருந்தேவியின் குறுங்கதைகள் குறித்த விரிவான பார்வையை எழுதியுள்ளார். பெருந்தேவியின் கட்டுரைத்தொகுப்புகள் குறித்து எழுத்தாளர் சுரேஷ் பிரதீப், மதுமிதா எழுதியுள்ளனர்.

ஸ்ரீவள்ளி கவிதைகள் பற்றி எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத் எழுதியுள்ளார். பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கட்டுரைகளை எழுத்தாளர், இதழாளர் லதா, கமலதேவி, விக்னேஷ் ஹரிஹரன், சக்திவேல், ஸ்வேதா மயூரி, பார்கவி, ரம்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.

பெருந்தேவியின் நண்பர்களான பயணி தரன், தி.பரமேசுவரி, அரவிந்தன், சித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவருடனான நட்பு குறித்த அனுபவக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். பெருந்தேவி அரங்காக செப்டம்பர் 2024-ல் நிகழ்ந்த க.நா.சு உரையாடல் அரங்கு (அமெரிக்கா விஷ்ணுபுரம்  இலக்கிய வட்டம்)  பற்றியும், அதில் பெருந்தேவி படைப்புகள் பற்றி உரையாற்றிய விஸ்வநாதன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் உரைகளின் கட்டுரை வடிவம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் பெருந்தேவி படைப்புகள் குறித்து உரையாடியதும் தொகுத்துக் கொண்டதும் அறிதலாக அனுபவமாக இருந்தது ஜெ.

நவம்பர் நீலி இதழ் 

நீலி குழு.

([email protected])

முந்தைய கட்டுரைஅன்னையும் செவிலியும்
அடுத்த கட்டுரைபரணீதரன்