தமிழில் நவீனப்புனைவுகள் உருவாகி வந்த காலகட்டத்தில் தழுவல்கள் வழியாக செய்யுள்நாடகம் தமிழுக்கு அறிமுகமாகியது. அக்காலத்தைய செய்யுள் நாடக நூல்களில் ஒன்று மனோன்மணீயம். ஏறத்தாழ சமகாலத்தைய நாடகம் என மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் நண்பரான டி.இலட்சுமண பிள்ளை எழுதிய வீலநாடகத்தைச் சொல்லலாம், அதுவும் தழுவல் நாடகமே. “தமிழும் ஆங்கிலமும் கலந்து பெற்ற அரும்பெறல் மகவு’ என்று இந்நாடகத்தை எஸ்.வையாபுரிப்பிள்ளை மதிப்பிடுகிறார்.
தமிழ் விக்கி மனோன்மணீயம்