அடிமை சாசனம், கடிதம்

நவீன அடிமைசாசனம்

அன்புள்ள ஜெ,

எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, மதுரை புத்தக திருவிழாவில் சந்தித்து உங்களுடன் பேசிக்கொண்டிருந்தது மன நிறைவாக இருந்தது

தளத்தில் வந்த அடிமைச்சாசனம் – கடிதம் வாசித்தேன். அரபு நாடுகளிலும் கிட்டத்தட்ட இதுபோன்ற சூழலே நிலவுகிறது. இதுபோன்றதொரு சூழலிலிருந்துதான் வெளியேறி வந்தேன்.

நான் 2006ல் பணியில் சேர்ந்தபோது எங்கள் நிறுவனம், அமெரிக்க மேலாண்மை சார்ந்து  அவர்களின் நேரடி ஆளுமையின் கீழ் இயங்கியது. அன்று பெரும்பாலும் அவர்களின் இந்தோனேசிய நிறுவனங்களிலிருந்து நேரடி அனுபவம் பெற்றவர்கள் மேலாளர்களாகவும், மற்ற ஆசிய, இந்திய, அரேபியதொழிலாளர்கள்அதிகமாகவும் இருந்தார்கள்

இந்திய நிறுவனத்தில் பணிபுரிந்து நேரடியாக அங்கு சேர்ந்திருந்த அந்த காலங்கள் எனக்கு இப்படியெல்லாம் பணிச் சூழல் இருக்குமா என்று அதிசயிக்கும் விதமாக இருந்தன. இந்திய மேலாளர்களின் ஆதிக்க மனநிலை சற்றும் இல்லாமல் நட்புசார்ந்து பழகிய பெரிய அதிகாரிகளையும், நிறுவன தலைவர்களையும் அன்று சந்தித்து பழகியதை இன்று நினைத்து உவகை கொள்கிறேன்.  

அன்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது அரபுநாடுகளில், கிட்டத்தட்ட அரபிக்களின் முழு முற்றான அதிகாரத்தின் கைகளில் பெரும்பாலான நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களின் நிழல்களாக இந்திய பாகிஸ்தானிய அதிகாரிகள் நிறுவனங்களை நடத்துகிறார்கள். இது இன்று கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அரபுநில நிறுவன சூழலையும் மாற்றிவிட்டது

ஒரு வருடத்திற்கு முன்பு, என் பணிசார்ந்து என்னை முழுமையாக நிறுவியிருந்த சூழலில், சிலமாதங்களில் எனக்கு பணிஉயர்வு கிடைக்கவிருப்பதாக சொன்னார்கள். எனவே சில நாட்கள் அவர்களுக்குள், அவர்களின்அந்தசூழலில் வாழ்ந்து பார்த்தேன். கொஞ்சம்கூட மனித தன்மையே இல்லாமல், “பணித்தன்மைகள் மட்டுமே நிறைந்திருந்த அந்த உலகில் சிலநாட்கள் கூட என்னால் இருக்க முடியவில்லை

இனிமேல் என்னால் இங்கிருக்க முடியாது என்று முழுமையாக என்னை உணர்ந்தது அன்றுதான். அன்றுதான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவுசெய்தேன்

நீண்ட நாட்கள் அரபுநாட்டில் இருந்துவிட்டு, இந்தியா என்ற என் பழைய வாழ்விடத்தில் புதிய மரமாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிசெய்துகொண்டிருக்கிறேன். இன்று 12-10-24 பணியை விட்டுவந்து சரியாக ஒருவருடம் நிறைவடைந்துவிட்டது. அன்றாடத்தில் எத்தனையோ இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு கணமும் நான் விட்டுவிட்டு வந்ததை நினைத்து வருந்தியது கிடையாது

மாறாகவிலகி வந்ததை“, “விட்டுவிட்டுவந்ததை, “விட்டுவிடமுடிந்ததை என் பேறாக கருதுகிறேன். எனக்கு கிடைத்த அருளாக கருதுகிறேன்

அடிமைச்சாசனம் என்பதின்பலியாடாகமறுமொழியிடாமல் அதிலிருந்துவெளியேறி வந்தவன்என்றமுறையில் எழுதிக்கொண்டிருக்கும் அருளை இறையருள், குருவருள் என்று சொல்லாமல் வேறு எப்படி எடுத்துக் கொள்வது…. 

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

அன்புள்ள பழனிவேல் ராஜா,

நீங்கள் விடுபட முடிந்த நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விடுபட்டமையின் இழப்புகள் உண்டு என அறிகிறேன். ஆனால் விடுதலைக்கான விலை அது. இந்த வகையான சூழல்களில் பொருளியல் கட்டாயங்களுக்காகவோ, ஆணவம் சீண்டப்பட்டோ தன் தகுதி மற்றும் திறனை சற்றே மிகையாக மதிப்பிட்டு புதிய செயல்களில் பாய்ந்து இறங்கி இழப்படைபவர்கள் உண்டு. பல நண்பர்களில் அது காணக்கிடைத்துள்ளது. அந்தவகை மிகைசாகசங்கள் இல்லாமல் இந்தச் சூழலைச் சரியாகக் கணித்து, சீரான சிறு தொடக்கங்கள் வழியாக அடுத்த காலகட்டத்தை தொடங்குவதே சிறப்பானதாக இருக்கும். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஎமர்சன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைசைவக்கல்வியும் நவீன உள்ளமும்