வெண்முரசின் குரல்கள்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

நீலத்தின் வழியாக பிரபந்த வாசிப்பிற்கு ஒரு குழுவாக  சென்றுசேர்ந்தது போல.

வெண்முரசின் மீது கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி *வெண்முரசு வாசித்தல்* என்ற குழுவை ஆரம்பித்து  நண்பர்களிடம் அறிவித்தேன். ஆர்வமாக அனைவரும் கலந்துகொண்டார்கள். கீதா அதனை spotify ல் பதிவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.அதன் அத்தியாயங்களை வேவ்வேறு குரல்வழி கேட்கும் அனுபவத்தை பெறுதலே முதல் நோக்கம். உலகின் அனைத்து பக்கங்களிலிருந்தும் வரும் வெண்முரசின் குரல்கள்.. குரல் மட்டுமேயான வெண்முரசு.

குழுவின் செயல்பாடு நீர்த்து போகக்கூடாது என்பதற்காக முப்பது பேர்கள் மட்டுமே கொண்டகுழு என கட்டுப்பாட்டையும் நிர்ணயித்துக்கொண்டோம். இப்போது வண்ணக்கடல் போய்கொண்டிருக்கிறது. இதற்கிடையே மேமாதம் ஒரு யோசனையாக குழுவின் பெயரை இசை நாடக வெண்முரசு என மாற்றிக்கொண்டோம். அதன் முதல் அடிவைப்பாக முதற்கனலின் சத்யவதிபீஷ்மர் உரையாடலை ஒலி நாடகமாக பதிவேற்றும் முயற்சியில் இருக்கிறோம்.

சேர்ந்து ஓரு விஷயத்தை முன்னெடுப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி உள்ளது. அது மட்டுமே நம் வாழ்வில் நினைவில் நிற்கும் தருணமாக செல்வமாக எடுத்து நோக்கக்கூடியதாக இருக்கும் அருமணி எனத் தோன்றுகிறது.

நன்றி ஜெ.

வணக்கங்களுடன்

விஜயலஷ்மி

சென்னை

[email protected]

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 

முந்தைய கட்டுரைOn Colour
அடுத்த கட்டுரைதாரா செரியன்