வணக்கம்.
கனடாவில் நடைபெறும் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில்(2024, செப். 20,21,22) கலந்து கொள்ளவும், மருத்துவர் போல் ஜோசப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் என் நூல்கள் அறிமுக விழாவில்(23/09/2024) கலந்துகொள்ளவும் டொராண்டோ வந்துள்ளேன்.
என்னால் தொகுக்கப்பட்ட தொல்காப்பிய ஆவணங்கள் சற்றொப்ப 500 ஆராய்ச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதில் தொல்காப்பிய அறிஞர்கள், பதிப்பாளர்கள், உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என இருநூறு அறிஞர்களின் படங்கள் இடம்பெற உள்ளன.
பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்கு உலக அளவில் ஒரு கண்காட்சி நடைபெறுவது இதுவே முதலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
அரசு உதவியோ, செல்வர்களின் அரவணைப்போ இல்லாமல் கடந்த ஈராண்டாக உழைத்து, தமிழார்வம் காரணமாக இப்பணியைச் செய்தேன். கண்காட்சி ஆவணங்களை நூல்வடிவிலும் மாற்றி வைத்துள்ளேன். பொருள்நிலை மேம்பட்டால் தொல்காப்பிய ஆவணங்கள் தனி நூலாகும்.
தங்களின் விலை மதிப்பற்ற ஊக்கமொழிகளும் என் ஆவணத் திரட்டலுக்கு உதவின. நன்றிப்பெருக்கால் இதனைக் குறிப்பிடுகின்றேன்.
மு.இளங்கோவன், புதுச்சேரி.