கணிதம்-ஒருகடிதம்

கணிதம் பற்றி
Gödel, Escher, Bach: An Eternal Golden Braid மிக பிரபலமான புத்தகம். பின் 70 களில்.. Tao of Physics உடன் பிரபலமானது. கணிதம், ஓவியம் மற்றும் இசையினூடே உள்ள நுணுக்கங்களை மிக அழகாக சித்தரித்த புத்தகம். கொடேல் கணிதத்திற்கு, பாக் இசைக்கு மற்றும் ஈஸ்சேர் ஓவியத்திற்கு என. இவர்கள் தங்கள் கலையை நுண்ணுணர்வுடனும், mystic அணுகுமுறையிலும் வெளிபடுத்தியதையும் சித்தரித்து, பல தளங்களினூடே, விடுகதைகளை (puzzles) விவரித்து, வெகு நேரம் மனதில் அசை போட வைத்த புத்தகம்.
Bertrand russel கணிதத்தை ஒருங்கிணைந்த தளத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்த போது, நம்பிக்கையில் உள்ள போதாமையை, கணிதம் மூலமாகவே நிரூபித்தார். அதுதான் அவரது theory of incompleteness ஆகியது. பல துறைகளுக்கு இந்த உண்மை பெரிதாக  உதவி உள்ளது.
தமிழில் எப்படி வரும் என தெரியவில்லை. எளிய ஆங்கிலத்தில்.. அதன்  சுருக்கம் Starting with given set of axioms, you will always have areas that can neither be proved nor be disproved.
1980 இல் pulitzer prize  வாங்கியது. குறிப்பிட்ட வலைத்தளம், அதன் குறிப்புகள், அதன் சிந்தனைகள், உபயோகமானதே. அதற்கு சுமார் 20  வருட தொடர்ச்சி (பாரம்பரியம் என உபயோகிக்கவில்லை) குறிப்பிடத்தக்கதே.
எனக்கு கணிதத்தில் சுமாரான தேர்ச்சியும், சுவாரசியமும் உண்டு. இருப்பினும் படிக்கும் அனைவரின் சிந்தனையைத் தூண்டுமென எண்ணுகிறேன்,
‘எல்லா கணிதசூத்திரங்களும் கவிதைகளே என ஒருமுறை நித்யா சொன்னார்’ – இதில் உண்மை உணர்கிறேன் .
Mandelbrot  fractals இதை சார்ந்தவை – எளிய அறிமுகம்
அன்புடன்
முரளி
முந்தைய கட்டுரைவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைசித்பவானந்தர்-கடிதம்