அண்மையில் கலைச்செல்வி எழுதிய காந்தி குறித்த இரண்டு நூல்களை ஒரே சமயம் வாசித்தேன். சென்றமாதம் சென்னையில் வாங்கியவை அவை. கலைச்செல்வியை விஷ்ணுபுரம் அரங்கு வழியாகவே அறிந்துகொண்டேன். இரு நூல்களுமே மிக முக்கியமான படைப்புகள்
பொதுவாக எனக்க்கு பெண்களின் எழுத்தில் ஈடுபாடில்லை. ‘பெண்களின் விசேஷமான பிரச்சினைகளை எழுதுபவர் இவர்’ என்று பின்னட்டைக்குறிப்பு இருந்தால் அதன்பின் அந்த ஆசிரியரின் புத்தகங்களையே வாங்க மாட்டேன். எனக்கு இன்னொருவர் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாது, அக்கறையும் இல்லை, வரலாறும் தத்துவமும் பழக்கமே இல்லை, நான் என் பிரச்சினைகளை personal chronicles போல பதிவுசெய்யவும் பாவலா செய்யவும் மட்டும்தான் எழுதுகிறேன் என்று ஒருவர் சொல்வதற்குச் சமம்தான் அது. பிரச்சினைகள் எவருக்குத்தான் இல்லை? வாழ்க்கையில் நாம் வெவ்வேறு புலம்பல்களை தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அதையே எழுத்தாகவும் ஏன் வாசிக்கவேண்டும்?
இதெல்லாம்தான் என் எண்ணங்கள். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு வாசிப்பில் சமூகப்பொறுப்பு ஏதும் இல்லை. நான் தனிமனிதன். எனக்கு மனநிறைவுக்காகவும் அறிவுக்காகவுமே நான் வாசிக்கிறேன்.
விஷயத்துக்கு வருகிறேன். கலைச்செல்வியின் இரண்டு நூல்களுமே எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தன. ஓர் எழுத்தாளர் தன் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு obcession கொண்டிருப்பது மிகவும் creative ஆன ஒரு விஷயம் என நினைக்கிறேன். அது அவருடைய தீவிரத்தையும் தேடலையும் காட்டுகிறது. அத்துடன் அவர் எதையோ கண்டடைந்துகொண்டிருக்கிறார் ஒரு subtravelling நடைபெறுகிறது என்பதையும் காட்டுகிறது. அது உண்மையான ஒரு விஷயம். அந்த பயணத்துடன் நாமும் செல்லவேண்டும் என்னும் ஆர்வம் உருவாகிறது.
சமர்க்களம் காந்தியின் வாழ்க்கை சார்ந்த கதைகள். அதில் புளகிதம், சமர்க்களம் என்னும் இரண்டு கதைகளும் நவகாளி யாத்திரை பற்றியவை. காந்தியின் வாழ்க்கையிலுள்ள hyperdramatic தருணங்களைத்தான் கலைச்செல்வி அதிகமும் கருத்தில்கொள்கிறார். ஏனென்றால் அதில்தான் காந்தி சந்தித்த பிரச்சினைகளும், காந்தியின் clash of values ம் அவருடைய personality யில் வரும் sublime போன்ற நிலைகளும் வெளிப்படுகின்றன. கலைச்செல்வியின் இந்த இரண்டு கதைகளையுமே ஒரு minor classics என்று என்னால் துணிந்து சொல்லமுடியும்
காந்தியைத்தவிர காந்தியை எவரால் கொல்லமுடியும்? என்ற நூல் காந்தியைப் பற்றிய கலைச்செல்வியின் எண்ணங்கள். நான் இந்த நூலை கொஞ்சம் தயக்கத்துடன் மட்டுமே வாசித்தேன். ஏனென்றால் இந்தியாவில் எழுதப்படும் நூல்களில் 90 சதவிதம் காந்தியைக் கொல்ல ஆசைப்படும் நூல்கள்தான். நமக்கு காந்தியிடம் இந்தப்பிரச்சினை இருக்கிறது. காந்தி நமக்கு தந்தை வடிவம். ஆகவே அவரைக் கொல்லாமல் நமக்கு நம் everyday sins ல் திளைக்க முடிவதில்லை. நானறிந்த வரையில் இந்த psychic complex வெள்ளைக்காரர்களுக்குக் கிடையாது. ஆகவே விதவிதமாக காந்தியை துப்பறிந்து, கொலைபுரிந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கலைச்செல்வி காந்தியை அப்படி அணுகவில்லை. தந்தையாகவும் பார்க்கவில்லை. எதிரியாகவும் பார்க்கவில்லை. அத்தியாவசியமான ஒரு distancing and curiociy அவரிடம் இருக்கிறது. காந்தியை அவருடைய காலகட்டத்தில் வைத்தும் தன் காலகட்டத்தில் வைத்தும் பார்க்கும் கட்டுரைகள் இவை
ரெண்டு நூல்களுமே முக்கியமானவை.
கே.ஆர். கிருஷ்ணாராம்