மழை- கடிதம்

மழைப்பாடல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

இருக்கின்றேன்என்னும் உணர்வுக்கப்பால் என்னிடம் வேறெதுவுமில்லை. அதன் பொருள்ஏதோ இருக்கேன்என்பதல்ல, இருக்கிறேன் மகிழ்ச்சியுமில்லாமல் துயரமுமில்லாமல் ஏழாம் உலகம் வாசித்த போதிருந்த அதே உணர்வுகளோடு அனைத்தையும் கவனித்துகொண்டிருக்கிறேன். மனிதர்களின் ஊடாட்டங்கள் கண்ணாடித் திரை போல் கண் முன் விரிகின்றன, நான் என நம்பப்பட்ட அனைத்திலிருந்தும் என்னை நான் கிழித்து எடுத்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன், நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள தொடர்புகளை களைத்து போட்டு அடுக்கி விடளையாடுகிறேன். வாழ்வே விளையாட்டென ஆட்டம் முடித்து காய்களை மீண்டும் சீராக அடுக்குவதே பணியெனவெறுமனே மனிதர்கள் மட்டுமில்லாமல் தெய்வங்களின் விளையாட்டையும் உணர்ந்து கொண்டிருக்கிறேன். துர்வசு போல் கைகூப்பியபடி உலகை நோக்கி  நிற்கிறேன், அவர்களை வாழவைத்த தெய்வம் நம்மை வாழ வைக்க தயங்குமா என்ன? நூல் மட்டுமே வாழ்வெனும் ஒரு அதீத உணர்வு ஒன்று உள்ளது அதையும் புனிதப்படுத்தி கொள்ள பெரிய சிந்தனைகள் இல்லை. இருள் மிதக்கும் நடுக்காட்டில் தனியனாக பெரும்பயணம் செல்பவனுக்கு அரிதாக கிடைத்த யானை அளவு மின்மினி அது.

 ஆசிரியருக்கு வணக்கம், முதற்கனலை தொடர்ந்து மழைப்பாடல் வாசித்தேன். நூலாக வாசிக்க அமையவில்லை, இம்முறையும் தளத்திலேயே வாசித்து முடித்தேன்.

பீஷ்மர் மீண்டும் அஸ்தினபுரி திரும்புகிறார். மழைப்பாடல் ஆரம்பம் முதற்கனலின் நிகழ்வுகளோடு ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் வேலையில் என் வாசிப்பு மேலும் தீவிரம் கொண்டது. மற்போரில் தோற்று சுயவெறுப்பு கொண்ட திருதராஷ்டிரனுக்கு கிடைக்கும் அன்னையின் தழுவல் உச்ச நாடகம் போல் தோன்றினாலும் அதை யாராலும் விளக்கிட இயலுமா தெரியவில்லை!  

அகத்தில் கூர்வாள்கள் அதிர்ந்து கொண்டே இருப்பதைக் காண்கிறேன் தாளாத பசியில் துடிக்கும் கிழவரின் அலறல் ஓசைகள், அல்லது வானை பிழந்து கொட்டும் மழையின் நிலம் தொடும் பேரொலி. இங்கிருந்தே அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் முடிந்தளவு தொகுத்து எழுத முயல்கிறேன் , காந்தரம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் திருதராஷ்டிரனும் விதுரனும் பேசிக்கொண்டிருப்பார்கள், திருதராஷ்டிரன் பதற்றம் கொண்ட மனோநிலையிலேயே இருந்து கொண்டிருப்பதை விதுரனும் அறிந்திருப்பார், பசியை மட்டுமே வாழ்க்கையென கொண்டவனின் அகம் எப்படி எல்லா உணர்வுகளிலும் கட்டற்றதாகவேயிருக்கும் என்பதற்கு சரியான சான்று அது. அப்பசியினூடாக காந்தாரியை வென்ற திருதாராஷ்டிரன் வீரன் என ஏற்றுக்கொள்ளப்பட்டார். கடைசியாக விசித்திர வீரியனை தெரிந்த போது காது மடல் நனைந்தது, திருதராஷ்டிரனின் உணர்வுகள் கடந்த காலத்தை நினைவுப்படுத்தி அகத்தை திகிலடையவைத்து சில கணங்கள் விழி ஊற செய்த போது ஒன்றை உணர்ந்தேன், நான் என்ற உணர்வு மட்டும் தான் முழுமுதல் உணர்வு, என் தட்டில் உணவு இல்லாத போது அறத்தை நான் ஏன் பேன வேண்டும்? அல்லது அப்படி ஒருவரால் முடியுமா

விசித்திர வீரியனை என்னால் மழைப்பாடலிலும் உணரமுடிந்தது. தந்தை போல் மகன் என கடந்திடாமல், பாண்டு பேச பேச அதில் விசித்திர வீரியனின் இருப்பை எளிதாக உணர முடிந்தது.

அவர்கள் இரு உடல் ஒரு ஆன்மா என்றால் மிகையல்ல.

முதற்கணலிலிருந்தே பெண்களின் அறிய முடிந்திடாத அவர்கள் நம்மை அறியா விடாமல் பார்த்துக்கொள்ளும் ஆழ்மனதின் மழலை சிரிப்பு அல்லது கம்சன் வீழ்த்திய காளையின் கொலை முகம் என  இம்முறை குந்தி ஆட்டத்தை துவங்குகிறாள். தன் முதல் நகர்விலேயே காய்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்ற துவங்கிவிட்டாள். கொலை கொலை என கூர்வாள்கள் அதிர்ந்து கொண்டே இருக்க ஆட்டம் அனல் கொள்கிறது. விருப்பம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம் பொறுப்பேற்றிருக்கும் அனைவரும் ஆட்டத்தை ஆடியே ஆக வேண்டும். ஆட்டத்தில் தெய்வங்களும் களம் காண்கிறார்கள்

இதோ ஆட்டம் இனி சிலந்தி வலை பின்னல்களாக வளர்ந்து கொண்டே செல்லப் போகிறது என்னும் வேலையில் அஸ்தினபுரியின் வானம் அதை எடுத்துறைக்கிறதுஇதுவரை கண்டிறதாத அனுபவங்கள் மற்றும் தத்துவங்கள் எதையாவது கற்று கொள்வதுமாக இருந்த என் அகம் இப்போது அந்த ஆட்ட களத்தின் ஓரத்தில் நின்று ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. அனைவரின் மண்டைக்குள்ளும் கோடான கோடி யோசனைகள் ஒன்றை ஒன்று அஞ்சிகின்றன, ஏமாற்றுகின்றன, சுவாரஸ்யமான சதுரங்க ஆட்டம்

வேழம் படைக்குதிரையை ஒரே அடியில் தரை வீழ்த்தியதை போல் இருந்ததது சகுனி பீஷ்மரிடம் வாங்கிய அரை, ஆனாலும் வேழம் இறை உள்ளம் கொண்டது அல்லவா, உடனேயே பிதாமகர் சகுனியை தன் நெஞ்சோடைத்து மீண்டும் வாக்குறுதிகளை அளிக்கிறார். கண்ணீர் மல்க நின்ற சகுனி மேல் இயல்பாக ஒரு கருணை துளிர்க்கிறது என்றாலும் சகுனி ஒநாய் பசி கொண்டவன் என அகம் சமாதானம் அடைகிறது. பீஷ்மர் எப்போதும் எவரிடமும் பேசுவது தன் அகத்தை மட்டும் தான் என தோன்றுகிறது. சகுனியை அரைந்த கணமே பிதாமகர் அவனை மைந்தனாக ஏற்றுக்கொண்டது பிதாமகருடைய பேரன்பின் வெளிப்பாடு. இப்போது களத்தில் இருந்த குதிரை வேறு வழிகளின்றி வெற்றுத்தரையில் செயலற்று கிடக்க இளவரசர் திருதராஷ்டிரன் வெறும் இளவரசர் மட்டும் தான்.

ஆட்டத்தை சமநிலையில் வைக்க விதுரன் தன் அரசியல் யுக்தியை ஆயுதமென கொள்கிறான் அதன்படி எதையெதையோ சமைத்து பாண்டுவை மன்னர் ஆக்க முயன்று வெற்றியும் கொள்கிறான்.

பின் ஆட்டமென நிகழ்ந்த அனைத்தும் வாழ்வென விரிகிறது. வாழ்வென்பது கணம் கணம் என நிகழ்ந்து கொண்டே இருப்பதினூடாக அதை அறிய நாம் அந்த வாழ்வை வாழ்ந்தாக வேண்டியதுள்ளது. அரசராகவும், அமைச்சராகவும், சூதராகவும் சமயங்களில் சேடி யாகவும் வாழ வேண்டியுள்ளது, அதன்பொருள் ஓரளவு அவர்களின் அகத்தை அறிய முடிகிறது

அரசர் ஆக வேண்டுமென வெறிகொண்ட திருதராஷ்டிரன் எப்படி பாண்டுவை வாழ்த்தி அரசாள கூறுகிறார் என்பதற்கான விடை திருதராஷ்டிரனின் அகத்தில் மட்டுமே எஞ்சக் கூடியது அவராலும் கூட அதை அறியா முடியுமா என்பது கேள்வி தான்,

ஒட்டுமொத்தமாக இங்கே ஒவ்வொருவரின் அகமும் நொடியை விடவும் வேகமாக மாறுதல்களுக்கு உட்படுகிறது ஆயிரம் மடங்கு வேகம் கொண்டு வளரும் துளிர் என, அது வெறுமனே நிகழ்வதுமல்ல அவர்களின் உணர்வுமண்டங்கள் கணத்துக்கு கணம் முற்றிலும் மாறான உணர்வுகளை அடைந்து கொண்டே இருக்கின்றன அதனினூடாக நிகழும் அகக்கொந்தளிப்பு, ஒரு புள்ளியில் அகம் சோர்வடைந்து அனைத்திலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ள அகத்தில் புதியவை வந்து நிறம்புகின்ற, இருள் பழகிய பின் புலப்படும் நட்சத்திரங்களென. களி நிறைந்த ஆட்டம் வாழ்வெனும் தருதணத்தில் பொருளும் கொள்கிறது. பின் அனைத்தும் அர்த்தற்ற ஒரு  ஊசல் நிலையில் நான் எனும் பேருருவம் நம்மை உவகையில் எப்போதுமாக நிலைக்கொள்ளச் செய்கிறது. மேலும்நான் என்பது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதர்களும்எனும் எல்லைக்கே அது இட்டு செல்கிறது.

பெரிய ஆட்டகளம் என தோன்றினாலும்  எண்ணங்களனைத்தும் சூரியனை கண்ட பனி போல் விலககிளர்ச்சியோடு வாசித்து கொண்டிருந்த எனதகம் மெல்ல சமநிலை கொண்டது. மழையை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேலையில் விழும் இடியும் மின்னல்களும் நம்மை சற்று பின்வாங்கி அமைதியடைய செய்யும் அதுபோல பாண்டு வனம் புகுந்ததும், உபாலனின் இறப்பும், சிவையின் ஒடுக்கப்பட்ட வாழ்வும், காந்தாரியின் நிலையழிவும் இருந்தன

பின்  எந்த உச்சகங்களுமற்ற ஒரு வாசிப்பு நிலை வேலை இல்லாத நாட்களை கடப்பது போல், அப்போது மழைப்பாடல் மேல் கேள்வி எழும்பியது வேறு என்ன இருக்கிறது? அந்த உணர்வுகள் நீங்க அவகாசம் அளிக்காமல் மீண்டும் தூரல். தூரல் வலுக்கிறது காந்தாரியும் குந்தியும் குழந்தைகளை பெற்ற படியே இருக்கிறார்கள். மகாபாரதம் பற்றி எந்த அறிவும் இல்லை என்றாலும் அன்றாட வாழ்வில் சகுனி அர்ஜூனன் பீமன் பெயர்களை எங்காவது எப்போதும் செவிகளால் கேட்க முடியும் தொலைக்காட்சிகளில் சினிமாக்களில் அல்லது ஏதேனும் பாடல் வரிகளில், அவ்வாறு நான் இதுநாள் வரை அறிந்த நாயகர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவர் பிறந்து கொண்டே இருக்கிறார்கள் எனும் வேலையில் மீண்டும் வாசிப்பு வேகம் கொள்கிறது

தீமைகள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகின்றன என தோன்றியது. திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்ட கேள்விகள். துரியோதனன் அஸ்தினபுரிக்கு தீயவற்றை உண்டு செய்யக்கூடும் எனவே அக்குழந்தையை எங்காவது தூரம் வைக்கலாம் என விதுரன் கூற திருதராஷ்டிரனும் அதை ஏற்கிறார் அறம் காக்க. ஆனாலும் திருதராஷ்டிரனிடம் உள்ள இயலாமை அதை மறுபரிசீலனை செய்ய வைத்து கணப்பொழுதில் கேள்விகளை அடுக்குகிறது. ‘ இப்படி பிறந்தது எங்கள் தவறா? விழி இழந்தவனாக நான் பிறந்தேன், நான் அரசாள கூடாது என்றார்கள். இம்மக்கள் என் மைந்தனையும் புறக்கனிக்கிறார்கள் என்றால், இவர்கள் அனைவரையும் அழித்து என் மைந்தனை காப்பேன் எனும் நிலைக்கு செல்கிறார். அந்த கேள்வியின் ஆழம் வரை சென்றேன். ஆம் அது அவர் தவறல்ல ஆனால் இப்போது எடுக்கும் நிலை தவறாக இருக்கக்கூடும் என தோன்றினாலும். முற்றிலுமாக திருதராஷ்டிரனின் வலி மிகுந்த கேள்விகளை புறக்கனிக்க இயலவில்லை. சில சமயங்களில் நம் கட்டுபாடின்றி நடக்கும் நிகழ்வுகளை, அது நம் தெய்வங்களின் விளையாட்டு என எண்ணிக்கொண்டு முன்நகர்வதை தவிர வேறு வழியும் இல்லை என தோன்றியது.

மறுபக்கம் பாண்டு பூரணமாக நல்லதோர் வாழ்வில் இருந்து கொண்டிருக்க, குழந்தைகள் பிறக்க அவர்களே அவர் வாழ்வின் அர்த்தம் என அக நிறைவுடன் காலத்தை வெல்கிறார். பீமனை கற்பனையில் பார்க்க அவ்வளவு உள நெகிழ்ச்சி அடைந்தேன் உணவை தவிர வேறெதையும் எண்ணாத குழந்தை, நான் கண்ட பீமன் மெல்லிய பெரிய தசைகளை கொண்டவன் வட்ட முகம் பந்து போல, தும்பிக்கை எதற்கு எனும் வினாவுடன் எப்போதும் அன்னையோடு திரியும்  யானைக்குட்டி போல

பிறகு,

நான்குவரிகள். ‘வைகானசமாதம், வசந்தருது, பரணிநாள், பின்மதியத்தில் அஸ்தினபுரியின் அரசனும் சந்திரகுலத்து விசித்திரவீரிய மன்னரின் மைந்தனும் திருதராஷ்டிரமன்னரின் தம்பியுமான பாண்டு விண்புகுந்தார். உணர்ச்சிகள் எழும் வேலையில் அறிவுகள் ஒழிந்து கொள்கின்ற போலும், பாண்டு இறந்த போது தோன்றியது வெறும் புராணக்கதை என அறிவு அறிந்தாலும் அகம் கொந்தளித்தது, என்னையுமறியாமல் பெருமூச்சொன்றினை நிகழ்த்தினேன். என் உணர்வுகள் குறித்து வியந்து சிரித்தேன். மீண்டும் இடைவெளி தாரமல் மாத்ரி சிதையேறியது கொடுங்கனவுக்கு ஒப்பானது.

இதை அஸ்தினபுரி எவ்வாறு எதிர்கொள்ளும் திரிதாஷ்டிரன் நிலை குறித்தும் பீஷ்மர்,விதுரன்,சத்யவதி, அம்பிகை குறிப்பாக அம்பாலிகை இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என அகம் அடுத்தடுத்த வரிகளை தேடி ஓடியது. அனைவரும் கனிப்பது. பெரிய அலறல் ஓசைகள் அழுகைகள் குழறுபடிகள் வேறென்ன? என்றபோது அஸ்தினபுரியில் ஒன்று நிகழ்ந்தது. நான் கற்ற அறிவையெல்லாம் வெட்கினேன், பின் அது தற்போதிய உணர்வெளிச்சியின் விசை விசை குறையும் மறுகணமே அறிவை அழைத்துக்கொள்வேன் என தோன்றினாலும் மழைப்பாடலின் கடைசி திரைகள் எனை சிறுமை செய்தன

பாவைகளோடிருந்த அம்பாலிகையை நோக்கி கதறிபடி வந்த அம்பிகை கூறுகிறாள் “”இந்த நகருக்கு இருபத்தாறாண்டுகளுக்கு முன்னர் வந்தபோது நான் இவளுக்கு அன்னையாக இருந்தேன். இவள் கையில் புதிய வெண்மலருடன் குழந்தைபோல இந்நகருக்குள் நுழைந்தாள்அதன்பின் எங்களுக்குள் ஏதேதோ பேய்கள் புகுந்து கொண்டன. என்னென்னவோ ஆட்டங்களை ஆடினோம். எல்லாம் வெறும் கனவு…  “இப்போது எல்லாம் விலகிவிட்டன. இதோ இப்போது எஞ்சுவதுதான் உண்மை. இவளுக்கு நானும் எனக்கு இவளும் மட்டுமே இருக்கிறோம். மீதியெல்லாம் வெறும் மாயை.” “போதுமடிஎங்கோ ஒரு காட்டில் நாமிருவரும் காசியில் வாழ்ந்த அந்த நாட்களை மீண்டும் வாழ முயல்வோம். அங்கேயே எவருமறியாமல் மடிவோம்…” சிறுமியாக நகர் நுழைந்த அம்பாலிகையை எண்ணிக்கொண்டேன், இந்த சதுரங்க ஆட்டத்தின் விசையில் எங்கோ தொலைந்தவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வாழ்வின் உன்னதமான தருணம் அல்லவா அது! ஆம்! மனிதர்கள் தெய்வங்களாகும் தருணம் அல்லவா அது

எங்கோ எப்போதோ வாசித்த சில வரிகளை இப்போது நான் மீண்டும் மீண்டுமென முனுமுனுத்துக்கொண்டிருக்கிறேன்….

புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு

நிறைவு!

அன்புள்ள ஆசிரியருக்கு நன்றி,

அன்புடன் பொன்சக்திவேல்.

முந்தைய கட்டுரைஊறும் தாய்ப்பால்
அடுத்த கட்டுரைசூரியவம்சம்