தங்களின் ஊக்கத்தினால் என்னுடைய அடுத்த பரிமாணமான மின்னூல் வெளியிடும் முயற்சியில் தங்களைச் சந்தித்ததற்குப் பிறகு பதினொரு நூல்களைப் பதிவேற்றம் செய்திருக்கின்றேன். முன்னர் கிடைக்காத நூல்களை இம்மின்னூல்களாகப் பதிவேற்றம் செய்திருக்கின்றேன். தங்களின் வாசகர்கள் இந்நூல்களைப் பயன்படுத்திக் கொள்ள வகை செய்திடக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதினொன்றில் கோவைத் தூறல் சிறுகதைத் தொகுப்பாகவும், செம்புலப்பெயர் நீர் ஐக்கூக் கவிதைத் தொகுப்பாகவும், அக்னிப்பூ என்பது கதைக்கவிதையாகவும், பூட்டாதிருக்கும் வாசல் என்பது கதைக்கவிதையாகவும், இதழ்ப் பதிப்பு நூல்களில் 21 சுவடிப் பதிப்பு நூல்களும், பதிப்புலகத் தூண்கள் என்பதில் சுவடிப் பதிப்பாளர்கள் அறுவரைப் பற்றியும், இலக்கிய இதழ்களும் நூல்களும் என்பதில் 36 இலக்கியப் பருவ இதழ்கள் பற்றியும் அப்பருவ இதழ்களில் வெளிப்போந்த 408 சுவடிப்பதிப்புகளின் குறிப்புகள் பற்றியும் எடுத்தியம்புகின்றன.
தமிழில் கதைப்பாடல் சுவடிகள் தொகுதி 1இல் தமிழில் வழங்கப்பெற்ற ஆறு கதைப்பாடல்கள் பற்றியும், தமிழில் கதைப்பாடல் சுவடிகள் தொகுதி 2இல் தமிழில் வழங்கப்பெற்ற இரண்டு கதைப்பாடல்கள் பற்றியும் எடுத்தியம்பப் பெற்றுள்ளன. சித்த மருத்துவத்தில் நாடி என்னும் நூலானது நாடி குறித்து சித்த மருத்துவம் குறிப்பிடும் செய்திகளை எடுத்துரைக்கிறது. புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை என்பது ஏழு திணைகளில் புறநானூற்றில் காணப்படக் கூடிய வாகைத்திணை பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.
- பதிப்புலகத் தூண்கள், https://amzn.in/d/505Q5jK
2. இதழ்ப் பதிப்பு நூல்கள், https://amzn.in/d/9QGbe5N
3. சித்த மருத்துவத்தில் நாடி, https://amzn.in/d/1yUfceU
4. இலக்கிய இதழ்களும் நூல்களும், https://amzn.in/d/9RwUWGF
5. செம்புலப் பெயர் நீர் (ஐக்கூக் கவிதை), https://amzn.in/d/jd3S9no
6. புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, https://amzn.in/d/glhWQXq
7. தமிழில் கதைப்பாடல் சுவடிகள் (தொகுதி 1), https://amzn.in/d/heiZK0h
8. அக்னிப்பூ, https://amzn.in/d/hTAJbUc
9. பூட்டாதிருக்கும் வாசல், https://amzn.in/d/7zUjyEH
10. கோவைத் தூறல் (சிறுகதைத் தொகுப்பு 1), https://amzn.in/d/8rprodm
11. தமிழில் கதைப்பாடல் சுவடிகள் (தொகுதி 2), https://amzn.in/d/cRyHyen