இரா.முருகன், இ.பா- கடிதங்கள்

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு

இரா.முருகன் தமக்கு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கிடைத்தமை குறித்து தெரிவித்து மகிழ்ந்தார் சரியான தேர்வு .

இந்திரா பார்த்தசாரதி,

சென்னை

அன்புள்ள ஜெ

இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதறிந்து சந்தோஷம். எனக்கு வயது 90. நான் முப்பதாண்டுகளாக இரா.முருகனின் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் கணையாழியின் சந்தாதாரர். டெல்லிக்கு அன்றெல்லாம் கணையாழி வந்ததுமே உடனே வாங்கி வந்து வாசிப்பேன். என் ருசிக்கு கணையாழிதான் அன்றைக்கு சரிவந்தது. மற்றச் சிறுபத்திரிக்கைகளில் எல்லாம் சண்டை சச்சரவாக இருக்கும். வெங்கட் ஸ்வாமிநாதன் என் ஆப்தர்தான். ஆனால் அவர் எழுதியதைக்கூட வாசிக்க மாட்டேன். இரா.முருகனை அப்போதே வாசிப்பேன்.

அவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற குறுநாவல்தான் நான் வாசித்த முதல் கதை என நினைக்கிறேன். அற்புதமான கதைகள் அவர் எழுதியவை. நுணுக்கமான தகவல்களுடன் ஒரு வாயாடி கதைபேசிக்கொண்டே இருப்பதுபோல இருக்கும் அவர் கதைகள். அப்படிப்பட்ட மனிதர்கள் அன்றெல்லாம் கிராமங்களில் இருந்தார்கள். அவர்களுக்குத்தெரியாத ஊர்வம்பும் மனசாஸ்திரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரால் சொல்லப்பட்டவை இரா.முருகனின் கதைகள் என்று நினைப்பேன். அதோடு அவர் சிறுபத்திரிகைச் சண்டைகள் எதிலும் தலையிட்டதில்லை. தன்னுடைய கதையுலகிலேயே முழுமையாக மூழ்கி வாழ்ந்தவர். எந்த நெகெட்டிவிட்டியும் இல்லாமல் எழுதியவர். ஆனால் கதைகளிலே கிண்டலும் அமுட்டுச்சிரிப்பும் எல்லாம் உண்டு. எனக்குப் பிடித்த எழுத்தாளருக்கு விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி.

ஏ.ராகவன்

முந்தைய கட்டுரைதனிமையின் நூறு ஆண்டுகள் –ரோட்ரிக்ஸ்
அடுத்த கட்டுரைபா.கண்மணி