விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஐரோப்பாவில்…

நண்பர் ஷர்மிளாவும் அவர் கணவர் ஸ்ரீராமும் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் வசித்து வருகின்றனர். ஆஸ்திரியா ஒருவகையில் ஐரோப்பாவின் மையம். இயற்கையழகுமிக்க நாடு.  அங்குள்ள விஷ்ணுபுரம் நண்பர்கள் அயல்சுக்கிரி என்னும் வாட்ஸப் குழுமம் வழியாக இணைந்துள்ளனர். (சுக்கிரி என இன்னொரு குழுமம் செயல்படுகிறது. சுக்கிரி என் கதையில் வரும் குரங்கு ஒன்றின் பெயர்)

இந்தக் குழுமத்தை முறையான விஷ்ணுபுரம் அமைப்பாக பதிவுசெய்து தொடர் செயல்பாடுகளில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களும் என் வாசகர்களும் அவர்களைத் தொடர்புகொண்டு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன். இந்த அமைப்பு இந்தியா, அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபுரம் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.

இந்த அமைப்பும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் பொதுவான கொள்கைகள், செயல்முறைகளுக்கு உட்பட்டது. முற்றிலும் அரசியல் சார்பற்று இது இயங்கும். இலக்கியம் மற்றும் பண்பாட்டுச்செயல்பாடுகள் மட்டுமே நோக்கம். நண்பர்களின் கூட்டாக, இனிய நட்புக்களமாக மட்டுமே திகழும்.

வருமாண்டுகளில் ஐரோப்பாவில் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கமும் உண்டு. முழுமையறிவு சார்பில் நிகழும் தத்துவம் – கலை பயிற்சியரங்குகளையும் நடத்த எண்ணுகிறோம்

தொடர்புக்கு [email protected] 

 

முந்தைய கட்டுரைதொழிலெனும் தியானம்
அடுத்த கட்டுரைஜெர்மானிய தத்துவ அறிமுகம், கடிதம்