யாகவா வருகை

ஒருமுறை யாகவா முனிவரை சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. தொண்ணூறுகளின் கடைசியில். ஒரு ஓட்டலில் யாகவா முனிவர் தனபாலன் என்பவருடன் வந்து இறங்கி யாருடனோ ஆவேசமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது எனக்கு அவர் மேல் நம்பிக்கை வரவில்லை. அவரது ஞானமார்க்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் இன்று திடீரென்று அவர் எவ்வளவுபெரிய மகான் என்று தெரிந்தது.நாம் பொதுவாக பெரிய மகான்களை நம் சிற்றறிவைக் கொண்டு அளவிடுகிறோம். போகிறபோக்கில் எதையாவது சொல்லிவைக்கிறோம். அது நம் அறியாமை மட்டும்தான். இப்போது வெட்கித் தலைகுனிகிறேன். அன்றைக்கு யாகவா முனிவர் சொன்னதைக் கேட்டேன் ‘உலகம் அழியுதுடா.. பூகம்பம் வருது. எரிமலை வெடிக்கப்போகுது…2020லே உலகம் கெடையாதுடா…நான் சொல்றத நம்ப மாட்டே..அடுத்த ஜென்மத்திலே விஞ்ஞானியாகி வந்து சொல்றேன்..அப்ப நம்புவேடா கபோதி’

அவர் சொன்னதுபோல உண்மையிலேயே மறுபிறப்பு எடுத்து வந்துவிட்டிருக்கிறார்!!!  கீழே சுட்டியைப்பார்க்க

http://www.metacafe.com/watch/1379448/tsunami/

 

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைபேக்கர்