கிங் விஸ்வா(ஏப்ரல் 14, 1979) காமிக்ஸ் எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர். தமிழ் இதழ்கள்மற்றும் இணையதளங்களில் வரைகலை நாவல்கள் ( Comics and Graphic novels ) குறித்து அறிமுகப்படுத்தியும் அந்நாவல்கள் குறித்த அழகியல் மதிப்பீடு மற்றும் திறனாய்வுக் கட்டு்ரைகளும் எழுதியும் வருகிறார். தமிழ் காமிக்ஸ் உலகம் என்கிற வலைத்தளம் வாயிலாக காமிக்ஸ் நாவல்கள் குறித்து 750 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஊடகவியலாளராக பணிபுரிந்து வருகிறார்.