கா. சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘விரிசல்’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; “வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன”