Recently, my wife and I visited the Puttaparthi Baba temple in Chennai one evening, for a gathering known as a ‘joint prayer’. My wife said: If Baba is truly someone who possesses extraordinary powers, he will contact me in some form. In such matters, both of us have an unexceptionally ambivalent mindset.
இதை சொற்களால் பகிர நிறையத் தடைகள் இருப்பதை அறிந்தும் சொல்ல முயல்கிறேன். ஏன் இந்த முன்னறிவிப்பு என்றால் நான் இப்போது இருக்கும் நிலை அப்படிப்பட்டதுதான். நான் இருக்கும் நிலை சொற்கள் அற்ற பேரமைதியான நிலை. இதில் காலம் வெளி என எந்தத் தடையும் இன்றி நான் பறந்து கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சலனதுக்கும் இடமில்லை. இந்த நிலைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.