கடலூர் சீனு, கடிதங்கள்

ஜெ

கடலூர் சீனு

நான் திரு சீனு அவர்களிடம் ஒரு 12 வருடம் முன்பு அவர் யார் என்று தெரியாத போது பேசியிருக்கிறேன். உங்கள் தளத்தில் அவர் கடிதங்கள் வர வர அவரை  அணுகுவதில் பெரிய தயக்கம் வந்து விட்டது. அறிவுத் தீ  உள்ளவரிடம்  ஏதாவது நாம் சென்று உளறி விட கூடாது என்ற தயக்கம். உங்களை அணுகுவதில் உள்ள அதே தயக்கம். அது ஒரு போதைதான். தூரத்தில் நின்று மொத்தமாக உள்வாங்குவது.

திரு சீனு அவர்களின் கருப்பு கண்ணாடி பற்றிய கட்டுரை என்னில் இன்னும் உறைந்து நிற்கிறது. சமீபத்தில் வெளியான நாயுடன்தான் என் வாழ்க்கை பற்றிய கட்டுரையை நான் வெயில் அடிக்கும் போதெல்லம் அசை போடுபவன்.

நான் உணர்ச்சி பொங்க அவரை பற்றி அனுப்பிய ஒரு குட்டி கடிதத்தையும் நீங்கள் வெளியிட்டீர்கள். இன்னொரு முறை  மலேசிய இலக்கிய தரம் குறித்த விவாதம் உங்கள் தளத்தில் நடந்த பொழுது மலேசிய எழுத்தாளர்களை விட உங்களுக்கு இவர் எழுதும் கடிதம் பல மடங்கு தரம் உயர்ந்தது என்று கூட எழுதியிருக்கிறேன்.

“இனிய ஜெயம்” என்று ஒரு கடிதம் தொடங்கினாலே கூர்மையாகி விடுவேன்.

இப்படி  ஒரு தலைசிறந்த அறிவுலக ஆசிரிய மாணவர் உறவு உள்ள சம காலத்தில் வாழ்வது ஒரு அரிய வரலாற்று தருணம்.

 

ரமேஷ்குமார்

 

அன்புள்ள ஜெ

கடலூர் சீனு, கவிஞர் சபரிநாதன் பற்றி எழுதிய ஒரு கடிதத்தில் சபரிநாதனின் கண்களைப் பற்றியும், அவரை ஒரு அழகன் என்றும் சீனு எழுதி இருப்பார். அதே எண்ணத்தை தான் நான் சீனு மீது எப்போதும் வைத்திருக்கிறேன்.சீனுவை சந்திக்குக்கும் போதெல்லாம் தழுவிக்கொள்ளாத கணங்களே இல்லை

சீனுவை நான் முதன்முதலில் சந்தித்தது 2009 ஊட்டி முகாமில் ஒரு காலை நேரத்தில், குருகுலத்தின் முதல் வலது குடிலின் முற்றத்தில், அவருடைய இளமை காலத்தில்:),  தாடி குடிமி இல்லாமல்

நான் உங்களை முதன்முதலில் சந்தித்ததும் அந்த அதிகாலையில் தான் சில நிமிடங்கள் உங்களை பற்றி பேசிக்கொண்டோம். இந்த நீண்ட நெடிய பயணத்தில் நான் அவரை மானசீகமாக அறிவேன்

பின் நாளில் அவருடைய நீண்ட கேசமும் பொருத்தமான நெற்றியும், தாடியும் ஆடி அணிந்த கண்களும் அவரது குரலும் அவர் அகம் காட்டும் புறம் . அவர் எப்போதும் பயணம் செய்ய ஏதுவான ஒரு வித All Terrain Shoes அணிந்திருப்பதை கண்டிருக்கிறேன்

நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் அறிவு ஜீவிகளின் முகத்தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி, அதை அவரிடம் கண்டிருக்கிறேன்

ஒரு முறை சீனு என்னிடம் சொன்னார், “என்கிட்ட அவங்களா வந்து குடுக்கற கவித புக்ச படிக்கமாட்டேங்க, அது தானா எப்படினா எங்கிட்ட வந்துச்சுனா படிப்பன்”

2019ல என் கவிதை நாலை கோவை விஷ்ணுபுரம் விழாவில் நம் ஈரோடு நண்பரின் ஸ்டாலில் வைத்திருந்தேன், நம் நண்பர்கள் சிலருக்கு கையெழுத்திட்டும் கொடுத்து கொண்டிருந்தேன்,சீனுவிடம் “ஒரு Book Publish பண்ணிருக்கேங்க தோணும் போது பாருங்க, அதோ அங்க இருக்குனு” சொல்லி விட்டு சென்றுவிட்டேன்

பின் சென்னையில் நிகழ்ந்த உங்கள் கட்டண உரையின் போது, அவரை சந்திக்கையில் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் என் கவிதைகளை பற்றி குறிப்பிட்டு அவரிடம் பேசியதைப்பற்றி சொன்னார், மகிழ்சியாக இருந்தது

கவிஞர் ச. துரையின் கவிதை தொகுப்பான ‘மத்தி’ பற்றி முதன்முதலில் நான் அறிய வந்தது, உங்கள் தளத்தில் வெளியான அவருடைய கட்டுரை வழியாகவே

ஒரு முறை வெளிநாட்டு பயணங்கள் பற்றி பேச்சு வந்த போது சீனு சொன்னார் “எனக்கு இந்த இந்திய மண் போதும்” என்று.

சீனு நீங்கள் அறிவீர்கள் இலக்கியத்தில் மட்டுமல்ல இந்நிலத்திலும்  உங்கள் வேர்கள்  ஆழமான தேடல் கொண்டவை.  அபூர்வமான பூக்களும்

Hope to see you sometimes Seenu Sir:)

 

வேணு வேட்ராயன்

முந்தைய கட்டுரைPrayer or Meditation
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விழா, உரைகள்