வையவன், பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதினார். சமூக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு பல படைப்புகளைத் தந்துள்ளார். நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவற்றை வலியுறுத்துகின்றன வையவனின் பல படைப்புகள். வாழ்க்கையின் போக்கை, சமூக நிகழ்வுகளை யதார்த்தமாகச் சித்திரிக்கின்றன.