ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ஸ்ரீநிவாச கோபாலன் தொகுத்தளிக்கும் க.நா.சு.வின் கவிதை குறித்த கட்டுரைத் தொடர் (2), வே.நி.சூர்யாவின் சமகால கவிதைகள் குறித்த உரையாடல் பாணி கட்டுரை, சுந்தர ராமசாமி காலச்சுவடில் மொழிபெயர்த்து வெளியிட்ட எது நல்ல கவிதை? என்பதற்கு இந்தியக் கவிஞர்கள் அளித்த பதில்கள் என 3 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சென்ற இதழில் வெளிவந்த க.நா.சு.வின் தமிழில் புதுக்கவிதை கட்டுரைக்கான எதிர்வினைகள் மற்றும் சில கவிதைகளும் வெளியாகியுள்ளன.
நன்றி
ஆசிரியர் குழு
மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.