முகயிதீன் நடுக்கண்டியில் கண்ட பஷீர்

எம்.என்.காரஸேரி

வைக்கம் முகமது பஷீர்

அன்புள்ள ஜெ,

இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்வரிசையில் வைக்கம் முகம்மது பஷீரின் நூலை எம்.என்.காரசேரி எழுதியிருக்கிறார், தமிழில் தோப்பில் முகமது மீரான்  மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பஷீரின் சிறுகதைகளின்  வடிவம், பேசுபொருள்  பற்றி  ஆராயும் கட்டுரையை  Ms-word வடிவில் இணைத்திருக்கிறேன்.
அன்புடன்
மணவாளன்

 

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்வரிசை:

                     வைக்கம் முகமது பஷீர்எம்.என்.காரசேரி   (மூலம்:மலையாளம்)

                             தமிழில்தோப்பில் முகமது மீரான்

அத்தியாயம் 3:  பஷீரின்  சிறுகதைகள்

கதை சொல்லும் மரபு நாட்டுப்புற கதைகளிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும், காப்பியங்களிலும் ஏற்கனவே கேரளத்தில் இருந்து வந்தாலும் மேற்கத்திய இலக்கியத்தின் செல்வாக்கின் விளைவாகத்தான் மலையாளத்தில்சிறுகதைஎன்ற இலக்கிய வடிவம் உருவானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மலையாளத்தில் இந்த இலக்கிய வடிவம் பிறந்தது. முதல் சிறுகதை எது என்பது பற்றிய இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. 1891ல்வித்யா வினோதினிமாத இதழில் வெளியானவாசனா விகுறிதிதான் மலையாளத்தில் முதல் சிறுகதை என்பது பெரும்பான்மையான இலக்கிய ஆய்வாளர்களின் கருத்து. கதையில் கதாசிரியரின் பெயர் கொடுக்கப்படவில்லை. அதை எழுதியவர் வேங்ஙயில் குஞ்சிராமன் நாயர் (1861-1914) என்று நம்பப்படுகிறது.

குற்றச்செயல்கள், அறிவீனம், அற்புதச் செயல்கள், நகைச்சுவை முதலியவற்றைச் சித்தரிப்பது தான் துவக்ககால மலையாள சிறுகதைகளின் போக்கு. அந்தக் காலத்திலுள்ள சமூகச் சூழலின் சிறுமின்வெளிச்சங்கள் கதைகளில் ஆங்காங்கே தெரியும். பெண் உடலில் மயங்கிப் போவதால் ஏற்படக்கூடிய அபாயம், திருடர்களைப் பிடிப்பதில் காட்டும் ஆர்வம், வம்புக்காரர்களுக்கும் அநியாயக்காரர்களுக்கும் நேரும் தோல்வி முதலியவை இக்கதையில் இடையிடையே வெளிப்படும். ஆனால் அந்தக் கதைகளில் அபூர்வமாகத்தான் அனாச்சாரங்களைப் பற்றிய விமர்சனம் தலைகாட்டும். சமூக அரசியல் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்பு ஏற்பட மலையாளக் கதைக்கு மேலும் சில பத்தாண்டுகள் தேவைப்பட்டன.

இந்த விழிப்புணர்வுடன் சேர்ந்து கேரளத்தில் வார மாத இதழ்களும் இலக்கிய வாசிப்பும் தீவிரமடையத் துவங்கியது. அரசியல் செயல்பாடுகள் கேரள சமூகத்தைக் கிளறிமறிப்பதற்கு தயாராகின்றன. மலபாரில் ப்ரிட்டிஷ் ஆதிக்கத்திற்கும், திருவிதாங்கூர் கொச்சி பிராந்தியங்களில் மன்னர் ஆட்சிக்கும் எதிராக மக்களிடையே கருத்து வலுப்பெற்று வரும் காலம். ஜனநாயகம், கம்யூனிசம், சோசலிசம், மதச்சார்பின்மை முதலிய நவீன அரசியல் விழுமியங்கள் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பம் சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் மிகவும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்ட வரலாற்றுக் காலகட்டம். முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் துவக்கவடிவமானஜீவல் சாகித்ய சங்கம்செயல்படத் துவங்கிய நேரம்.

சமஸ்கிருத இலக்கியத்தின் ஆதிக்கத்திலிருந்து மலையாளம் வெளியே வந்தது. பெரும் காப்பியம், சிறுகாப்பியம், ஆட்டக்கதை, கவிதை, ஸ்லோகம் முதலியவை மட்டுமல்ல இலக்கிய என்னும் கதையும், நாவலும் முக்கியமான இலக்கிய வடிவங்கள் என்ற உணர்வும் பரவியது. ஆங்கிலம் மூலம் பிரிட்டீஷ்பிரஞ்சுரஷ்ய படைப்புகள் வடிவமைப்பிலும் உள்ளமைப்பிலும் மலையாள  கதையில் செல்வாக்கு செலுத்திய சூழல், மேற்கத்தியச் செல்வாகு வாழ்க்கை முறையையும், இலக்கியம் உட்படவுள்ள கலாச்சார வடிவங்களையும் தொடத்துவங்கியது. பிரஞ்ச் கவிஞர் விக்டர் யூகோ (1802- 1885)வின்  ‘லெமிசரபிலெஎன்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து, மலையாளக் கவிஞர் நாலப்பாட்டு நாராயணமேனன் (1887- 1954)  ‘பாவங்கள்‘ (ஏழைகள்) என்ற பெயரில் மொழியெர்ப்பு செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார் (1925). இது மிக வேகமாக மலையாளக் கதைப் படைப்பாக்கத்தில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. வறியவர்களும், குற்றவாளிகளும்அடிமட்ட விளிம்பு நிலை மக்களும் இலக்கியத்தில் மைய இடத்திற்கு வருவதற்கான தடத்தை அந்த நூல் கேரளத்திலுள்ள எழுத்தாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும், வாசகர்களுக்கும் காட்டிக் கொடுத்தது. செக்கோவ், மோப்பஸாங், எமிலி ஸோலா முதலிய படைப்பாளிகளின் படைப்புகள் மலையாள படைப்பாளிகளின் படைப்புத் திசையைத் திருப்பிவிட்ட காலம். சாதாரண மக்களின் சிக்கல் நிறைந்த வாழ்க்கையை மையமாக்கி அவர்களுடைய பேச்சு மொழியை இடம் பெறச் செய்யவும் வாழ்க்கை  பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான போராட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் ஒரு சக்தியாக  இலக்கியம்  மாறிவிட்டது. ’ சாகித்ய க்ஷேத்திரம்‘, ‘சரஸ்வதி பிரசாதம்‘, ‘அட்சரத்தின் திருக்கோவில்’  முதலிய சொற்களுக்கு பிரச்சாரம் கிடைத்தது. இந்த ஜனநாயகமாக்கல் கேரள இலக்கியத்தில்நவீன மறுமலர்ச்சி காலகட்டம்என அறியப்படுகிறது. 1940களில் துவங்கும் இக்கால கட்டத்தில் முக்கியக் கதையாசிரியர்களில் ஒருவர் தான் வைக்கம் முகம்மது பஷீர்.

55 ஆண்டு காலமாக பஷீர் எழுதிய ஏறத்தாழ நூறு 

சிறுகதைகள் 13 நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியானஜன்மதினம்‘  1954-ல் வெளியானது. கடைசித்தொகுதியான, ‘யா இலாஹிபஷீரின் மறைவுக்குப் பின் 1997ல் வெளிவந்தது.

அவருடைய முதல் சிறுகதை எர்ணாகுளத்திலிருந்து வெளியாகும்ஜயகேசரிவார இதழில்  வெளியானஎன்டெ தங்கம்‘ (1938) ஆகும். மறு பதிப்பில்தங்கம்என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தக் கதையில் நாயகி வறுமையில் வாடும் ஒரு தெருத்துப்பரவு செய்யும் பெண். நாயகனும்  கதைசொல்லியுமான  ‘நான்ஒரு பிச்சைக்காரனும். இருவரும் அழகானவர்களல்ல. மழை அள்ளிக் கொட்டும் ஓர் இரவில் பிச்சை கேட்டுச் சென்ற கதாநாயகனை ஒரு செல்வந்தர் குடும்பத்திலுள்ள சின்ன முதலாளி மிதித்து வெளியேற்றுகிறார். அன்று அவருக்கு தஞ்சம் கொடுத்தது  ஏழையான அந்தத் தெருப்பெருக்குகின்ற பெண்ணின் ஓலைக் குடிசை. அவர்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.

இந்தச் சின்னக் கதை பிற்காலத்தில் பஷீருக்குள் விகாசமடைந்த பல சிறப்புக்களையும் மொட்டுப் பருவத்தில் காட்டித் தருகிறது. அன்புள்ள சின்ன எஜமான், ஒரு கதை சொல்கிறேன், கேட்க வேண்டும், என்று சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கின்றார். மரபு நீதிகளை மீறுகின்ற துவக்கம். அடுத்த பத்தியில் காதலியின் உடல் வர்ணனை.

கவிஞர்கள் எல்லாம் சூழ்ந்து நின்று ஆவலோடு புகழும் உடல் வடிவும் அழகுச் செழிப்பும் நிறைந்த எழிலானவள்என் தங்கம்என்று நீங்கள் நம்பினீர்களேயானால் அது மிகப் பெரிய  தவறு. அழகை ஆராதனை செய்யும் நமது கவிஞர்கள் யாரும் அவளைப் பார்த்திருக்க மாட்டார்கள்

என் தங்கத்தின் நிறம் சுத்த கறுப்பு. தண்ணீரில் முக்கி  எடுத்த தீக்கொள்ளி, தங்கத்தின் நிறம் சுத்த கறுப்பு, தண்ணீரில் முக்கி எடுத்த தீக்கொள்ளி. கறுப்பல்லாது காணப்படும் பகுதி கண்ணின் வெள்ளை மட்டுமே. பற்களும் நகங்களும் கூட கறுப்பு.” 

காதலனின் உடல் வர்ணனை கீழே தரப்படுகிறது.

உண்மையை உண்மையாகச் சொல்லுவதாகயிருந்தால்

எனக்கு இரண்டு கால்கள் உள்ளன. ஆனால் ஒரு காலுக்கு

கொஞ்சம் நீளம் அதிகம். காய்ந்து சுருங்கிய வேலிக்கம்பு போன்றது

இதன் நிலைமை. மூங்கில் கம்பின் உதவியுடன் தெருவில் நடந்து 

செல்லும் நான் இந்த காலை தரையில் இழுத்துக்கொண்டுதான்  நடப்பேன்

கயிற்றைக் கொண்டு இழுத்தது போன்ற அடையாளம் புழுதி நிறைந்த 

தெருவில் தெரியுமானால்  அதன் ஒரு முனையில் என்னைப் பார்க்கலாம்

சாக்கில் சுற்றி முதுகில் தொங்கவிட்டிருக்கும் பலாப்பழம் போன்று எனக்கு 

ஒரு கூன் உண்டு. என்னுடைய உடல்பகுதி  பூசணிக்காயாகும். மோட்டார் 

டயரின் துண்டு  போன்று இரண்டு உதடுகள் எனக்குள்ளன. அலங்காரமாக . அதில் எப்பவும் ஒரு பீடித்துண்டு புகைந்து கொண்டிருக்கும்

மரபு இலக்கிய ரீதியிலான அழகியல் பார்வையையும் உருவ வர்ணனைகளையும் எள்ளல் செய்யும் ஒரு போக்குகூட இதில் காணப்படுகிறது.

1938ல் எழுதிய கதை தான் பிற்காலத்தில் புகழடைந்த  ‘அம்மா‘. அனுபவங்களை உணர்ச்சி தீவிரத்தோடு சித்தரிக்கின்ற அந்தக் கதை சொல்லும் முறை, முதிர்ச்சியடைந்த வடிவத்திலேயே பஷீருடைய இந்த எழுத்தில் தெரியலாம். தன்னுடைய ஊரில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரமும் அங்கு காந்திஜி வந்ததும், சுதந்திர போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பும் சிறைவாசமுத்தான் கருப்பொருள். இவற்றிற்கிடையே வேதனையை உள்ளடக்கி தன்னை எதிர்நோக்கியிருக்கும் நேசம்மிகுந்த பொறுமைசாலியான உம்மா.

அது பஷீரின் உம்மா என்பது போல், சுதந்திர போராளிகளை எதிர்நோக்கியிருக்கும் இந்திய கிராமத்திலுள் எந்த அம்மாவாகவும் இருக்கலாம்; பாரத மாதாவாகவுமிருக்கலாம்.

இப்படியே கதாபாத்திரங்களுக்கு குறியீடாக வளர்வதற்கான சாத்தியம் இவருடைய பெரும்பான்மைக் கதைகளிலும்  உள்ளன. ‘டைகர்என்ற கதை இங்கு சொன்னதற்கு வேறு ஒரு  உதாரணமாகும். போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டரும்  போலீஸ்காரர்களும் அருமையாக வளர்க்கும் கறுப்பு நாய்  ‘டைகர்‘.  சிறையில் கிடக்கும் கைதிகளுக்கு கிடைக்க வேண்டி உணவைச் சாப்பிட்டுத் தடித்து கொழுத்துப்போன அந்த நாயை  கைதிகள் தாக்கினார்கள். போலீஸ்காரர்கள் எவ்வளவோ உதைகள் கொடுத்த பிறகும்   யாரெல்லாம் நாயைத் தாக்கினார்களென்று சொல்ல குற்றவாளிகளும் விடுதலை வீரர்களும் அடங்கி அந்தக் கைதிகள் முன் வரவில்லை. அதிகம் உதைபெற்ற ஒரு திருடன்கூட அந்த இரகசியத்தைக் காப்பாற்றினான். திருடனுடைய கால்பாதங்களிலிருந்து வடியும் இரத்தத்தை டைகர் 

நக்கிக் குடிக்குமிடத்தில் கதை முடிகிறது. கொடூரனான சப் இன்ஸ்பெக்டர் மூலம் அரசுடைய குறியீடாக மாறுகிறது, நாய். அதிகாரிகளின் கொடுமைகளை ஆத்மபலத்தால் எதிர்க்கொள்ளும் இயலாதவர்களுடைய உருவம் ஆழமாகச் சித்தரிக்கும் கதைகளில் ஒன்றுடைகர்‘,

இங்கு சொன்ன எடுத்துக்காட்டுகளில் வெளிப்படுவது போல், விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய கஷ்ட நஷ்டங்களையும் சிரமங்களையும் அனுபவித்து அடிமைத்தனத்தை எதிர்ப்பதற்கான இந்திய மக்களின் ஆத்ம வலிமை தான் பஷீரின் சிறந்த கதைகளுக்கு கருவாக அமைந்திருக்கிறது.

ஒரு சிறைக் கைதியின் சித்திரம்என்ற கதையில் சுருண்ட முடியும் புன்னகை பொழியும் பெரிய கண்களுமுள்ள அழகானவனான ஒரு கைதியின் படத்தைக் கண்டு கன்னிமடத்தில் பயில்கின்ற மரியாவுக்குக் காதல் தோன்றியது. அந்த உருவத்தை விடவும் அவனுடைய மாமியார் சொல்லிக் கேட்ட கதைகளிலிருந்து எழுந்த வீர நாயகனையே அவள் காதலித்தாள். அவர்களுக்கிடையிலான கடிதப் போக்குவரத்து மூலம் அந்த உறவு வலுக்கின்றது. ஒருபோதும் ஒருவரை ஒருவர் பார்த்திராத இருவர்களுக்குமிடையேயான காதல்! ஜோசபின் கடிதங்களிலிருந்து சுதந்திரமின்மையின் துயர அனுபவங்களும் சுதந்திரப் போராளிகளின் தியாகங்களையும்  அவள் தெரிந்து  கொள்கிறாள். சுதந்திரப் போராட்டத்தின் நெருப்பால் எழுதப்பட்ட இந்த சித்திரம் நேசத்தின் தியாகத்தின் ஆவணமாக மாறுகிறது ஜோசபின் கடிதம் முடிவுறுகிறது

*சகோதரி, நீங்கள் என்னை மறந்து விடுங்கள். எப்போதாவது நீங்கள் என் வீட்டுக்குப் போவதாகயிருந்தால் என் அம்மாவோடும் அப்பாவோடும் சொல்லுங்கள், அங்கு இருக்கின்ற என் படத்தை கிழித்தெறியநீங்கள் எனக்காக ஏதாவது ஒரு…… ஏதாவது சொல்லுங்கள். இந்த உண்மையைச் சொல்லக்கூடாது. என் தலை மயிர் அதிகமும் உதிர்ந்துபோயின. எஞ்சியவை நரைத்துவிட்டன. எனக்கு இரு கண்கள் இருந்தன. இப்போது வலது பக்கம் மட்டும் உண்டு. சிவந்து பிதுங்கி இரத்த நட்சத்திரம் போன்று….

மங்கள வாழ்த்துக்களுடன்

உங்கள் சிறை கைதி எண்.1051.”

ஒரு கண் போனது எப்படி? தளர்ந்து நரைக்க காரணம்

இதய வேதனையுடன் மரியம்மா ஜோசபுக்கு பதில் அனுப்பினாள். ஏதும் கேட்கவில்லை.  “நான் உங்களுக்காக காத்திருப்பேன். தேவைப்பட்டால் மரணம் வரைஎன்று. மட்டும் எழுதி அனுப்பினாள்.

போலீஸ்காரனின் மகள்என்ற கதையில் விடுதலைப் போராளியான ஜகதீசன் போலீஸைப் பார்த்து பயந்து ஓடி எதேச்சையாக போலீஸ்காரனுடைய வீட்டை அடைகிறான்போலீஸ்காரனுடைய மகள் பார்க்கவி ஜகதீசனுக்கு தஞ்சம் கொடுக்கின்றாள். அந்த அரசியல்வாதியின் தியாகத்தின் மீது அவளுக்கு மதிப்பு ஏற்பட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவளைச் சந்திப்பதற்காக சென்ற ஜகதீசனை அவளுடைா தகப்பனார் பிடித்து விட்டார். அவருக்கு வெகுமதியும் பணி உயர்வும் கிடைத்து, அவர் வேறு ஒரு திருமணமும் செய்து கொண்டார். தண்டனை முடிந்து வெளியே வந்த ஜகதீசன்  பார்க்கவியை திருமணம் செய்துக் கொண்டான்.

கொல்லம் கஸபா காவல் நிலைய லாக்கப்பில் கிடந்து எழுதியகைவிலங்குஎன்ற கதையிலும் இதைப்போன்று விடுதலைய போராளிகளுடைய துயர அனுபவங்களைப் பார்க்கலாம். சுதந்திர போராட்டத்தின் பன்முகங்களை வெளிப்படுத்தும் பஷீர் கதைகள் ஏராளம் உள்ளன. அந்த வகையான கதைகளைத் தொகுத்து ஓர் புத்தகம் வெளிவந்திருக்கிறது. (சுதந்திரப் போராட்ட கதைகள். டி.சி. புக்ஸ். கோட்டயம் 1998).

பஷீருடைய துன்பமயமான வாழ்க்கை அனுபவங்கள்  ‘ஜன்ம தினம்என்ற கதையில் சொல்லப்படுகின்றன. பிறந்த தினத்தில் பட்டினி கிடக்கவேண்டிய நிலை  ஏற்பட்டதையும் இரவு ஒரு நண்பனின் சமையலறைக்குள் ஏறி உணவு திருடி  உண்டதையும் இனிமையாக வெளிப்படுத்தும் இக்கதையின் உண்மையான கரு   மனித இருத்தலின் சங்கடங்கள்

நகைச்சுவையின் பேரால் புகழ்பெற்றதுபூவன்பழம்என்ற கதை, அதில் மனைவி ஜமீலா பீவியின் நிர்பந்தத்திற்கு இசைந்து இரவு பூவன்பழம் வாங்குவதற்காக கணவன் அப்துல் செல்கின்றார். பல சிரமங்களை தாண்டிக்கொண்டு தேடியும் பூவன்பழம் கிடைக்காமல் திரும்புகிறார்.அதற்கு பதிலாக ஆரஞ்சு  வாங்கி வந்த கணவனிடம் மனைவி சண்டை போடுகிறாள். கணவன் மனைவியைக்கொண்டு பூவன்பழம் என்று சொல்ல வைத்து ஆரஞ்சு சாப்பிடவைப்பதுதான் 

நிகழ்ச்சி‘.  பெண்களின் தற்பெருமையும், குடும்ப வாழ்க்கையிலுள்ள சுமைகளும், கணவன் மனைவிகளுக்கிடையேயான உறவின் சிக்கல்களும் நகைச்சுவையுடன் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தான் பிரசவிக்கையிலும் டாக்டர் வரவேண்டுமென்று சொல்லி  அழுது டாக்ரை வரவழைத்தது படிப்பறிவற்ற ஒரு பெண்ணின் தற்பெருமையாகும்.  ‘அய்சுக்குட்டிஎன்ற கதையின் கரு.

தன்னுடைய காதல் அனுபவத்திலுள்ள சிற்சில நிகழ்வுகள்தான் 

ஹுந்தறாப்பி புஸ்ஸாட்டோஎன்ற கதையில் நகைச்சுவையாயின.

ஃபேண்டசிகளை எதார்த்தம் போல் காட்சிப்படுத்தும் அபூர்வமான உத்தியை பஷீருடைய சிறுகதைகளில் பார்க்கலாம். ஃபாண்டஸி என்று சாதாரணமாக சொல்லப்படும் அனுபவங்களை நிகழ்வாக நம் முன் காட்டுகிறார். இந்த கதை, வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்று என்று சொல்லித்தான்நீலவெளிச்சம்என்ற கதையை துவங்குகிறார். அந்தக் கதையைப் பாருங்கள், ஆவியின் நடமாட்டங்கள் உள்ளனவென்று நம்பக்கூடியபார்க்கவி நிலையம்என்ற ஆள் தங்காத பங்களாவில் கதை எழுதுவதற்காகத் தனியாகத் தங்குகின்றார் பஷீர். துர்மரணம் நடந்த ஒரு இளம்பெண்ணின் ஆவி அங்கு குடி வாழ்கிறது என்பது  நம்பிக்கை. அந்த ஆவுடன் பஷீருக்கு நட்பு ஏற்பட்டது  எப்படியென்றால் அவளிடம் பேசியும் கதை சொல்லியும் அவளுக்குப் பாட்டுப்போட்டு கொடுத்தும் மற்றும் நாட்கள்.கடந்து போயின. ஒரு முறை எழுதிக் கொண்டிருக்கையில் மண்ணெண்ணெய் இல்லாமல் விளக்கு அணைந்து விட்டது. அறையை அடைத்து விட்டு வெளியே சென்று எண்ணெயுடன் திரும்பி வந்து அறை திறந்து பார்க்கும்போது  அங்கு பார்த்த .அற்புதத்தைப் பற்றி எழுதுகிறார்

வெள்ளைச் சுவரும் அறையும் நீல வெளிச்சத்தில் மூழ்கியிருக்கின்றன

 வெளிச்சம் விளக்கிலிருந்து…. இரண்டு அங்குலம் நீளத்தில் ஒரு வெண்  நெருப்புச்சுடர். நான் அற்புதத்தில் உறைந்து அப்படியே நின்றுவிட்டேன்

எண்ணெய்  இல்லாமல் அணைந்துவிட்ட விளக்கு எப்படி, யாரால் பற்றவைக்கப்பட்டது? பார்க்கவி நிலையத்தில் இந்த நீல வெளிச்சம் எங்கே இருந்தது வந்தது?”

பூ நிலாவில்என்ற கதையில், பயணங்களுக்கிடையில்  நிலவு பூத்த நடுச்சாமத்தில் பெண் என்று  நினைத்துக் கட்டித்தழுவிய எலும்புகூடு நொறுங்கி சுண்ணாம்பு போல் தூளாகி  உலகம் முழுவதும் வியாபிக்கின்றதாகவும் பிறகு அவை பூ நிலவின்  வெண்மையோடு கலப்பதாகவும் காட்டுகிறார்.

இளமைப் பருவத்தில் ஒரு தடவை கடற்கரையில் தனியாக  உட்கார்ந்து கொண்டிருக்கும்போது முழு நிர்வாணமாக அழகான ஒரு வெள்ளை நிறப் பெண் தன் முன்னால் நின்று குளிப்பதும் கோபப்பட்ட பொழுது சிருங்கார பாவனையில் தன்னைப் பார்ப்பது பிறகு திடீரென அவள் மறைந்து விடுகின்றதுமானஅனுபவத்தின் சித்திரிப்புத் தான்நிலாவு காணுபோதுஎன்ற கதையில்.

நிலவு நிறைந்த பெருவழியில்என்ற கதை வேறு அற்புதமாகும். பஷீர் நடு இரவில் போலீஸைக் கண்டு பயர் ஓடுகிறார். இதற்கிடையே ஒரு கோயிலுக்கருகாமையில் இளைஞன் தரையில்  கிடந்து உருளுவதைக் கண்டார். நெருங்கிச் சென்று பார்த்தபோது ஒரு காளைமாடாக அந்த இளைஞன்  உருமாறினான்.

நிலவும் நடுச்சாமமும் இருளும் வெளிச்சமும் பயமும் அன்பும் . மாயையும் எதார்த்தமும் விளக்க முடியாத ஏதோ ஒரு கலவையாக இருக்கிற  இந்தக் கதைகள் பல விதமாக விளக்கப்பட்டிருக்கின்றனயட்சி, பூதம், ஆவி, பிசாசு முதலியவை மீது பஷீருக்கு இருக்கு, நம்பிக்கை அவர் மனநோயுடன் தொடர்புடையதாக  சிலர் இலகுவாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் வெளிச்சத்தின் வடிவ வேறுபாடுகளை சுமந்து  திரியும் மனத்தின் ரொமாண்டிக் மாயையாக இருக்கலாம். “நீல வெளிச்சத்தில்யாரும் பற்ற வைக்காத விளக்கு  நேசத்தின் பிரதிபலிப்பாகலாம். வாழ்க்கையின் விளக்கு எரிவது வெளியிலிருந்து வரும் எண்ணெயாலல்லவென்றும் உள்ளேயிருந்து வரும் அன்பின், தியாக உணர்வின் எண்ணெயாலென்றும் பஷீர் தெரிந்திருப்பார். பஷீர் வெளிச்சத்திற்காக பற்றவைத்தது   பிடித்திருந்ததும் சொந்த வாழ்க்கையையாகும்

சமூக விமர்சனத்திற்கு எள்ளல் ஓர் ஆயுதமாக அமைகின்றது. பஷீர் கதைகளில், போர்  முடிவுக்கு வரவேண்டுமென்றால் எல்லோருக்கும் படைப்பற்று (வறட்டுச் சொறி) வரவேண்டுமென்று நிறுவுகிற, ‘போர் முடிவுக்கு வரவேண்டுமானால்என்ற கதை சமூகவிமர்சனத்திற்கு ஓர் உதாரணம்.

பஷீர் கதைகளின் மூலப்பொருள் அவருடைய அனுபவம்எந்த விசயத்தைச் சொல்லும் போதும் வாசகர்களின் உணர்வுபூர்வமான அனுபவமாக அது மாறுவது  என்பது அவற்றின் தன்மை. தனிமனிதர்களைத்தான் பொதுவாக இக்கதைகள் சித்திரிக்கின்றன. இந்த நபர்கள் தங்கள் உள்ளுக்குள், தேசம், சமூகம், குடும்பம், இவற்றின் காயங்களைச் சுமப்பவர்கள், சமூகத்திலிருந்து தனி நபருக்கு அல்ல, தனிநபரிலிருந்து சமூகத்திற்குத்தான் அவற்றின் போக்கு.

மலையாளத்தில் எக்காலமும் மகத்தான சிறுகதைகளில் சில எழுதியவர் பஷீராவார். கொஞ்சம் பக்கங்களில் நிகழ்கால வாழ்க்கைச்சூழலை தனக்கேயான ஒரு தரிசனத்தோடு அடையாளப்படுத்திய அந்தக் கதைகள், சிறுகதை என்ற இலக்கிய வடிவம் கேரளத்தில் அதிகம் பிரச்சாரமாவதற்குப் பெரும் உதவி புரிந்திருக்கின்றன.

மலையாளச் சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் மாறி அமைவதில் இவருடைய கதைகள் வழங்கிய கொடைகள் மிகப்பெரிது. சுதந்திரப்போராட்டம் போல் உண்மையான வாழ்க்கை அனுபவங்களின் கதையையும் (அம்மா) இளம் நங்கையின் கீழ்க்காற்று வெளியேறுகின்றதோடு காதலின் காற்றும் வெளியேறுகின்ற கதையையும் (பார்ர்று) பஷீர் ஒரே மாதிரியாக எழுதுவார். ‘கதைஉள்ள கதைகளையும், ‘துவக்கம் மத்திமம்  இறுதி’  பொருத்தமுள்ள கதைகளையும் பாராட்டியிருந்த இலக்கிய மரபின் விதிகளை மீறியவை இவருடைய கதைகள். அலங்காரமற்ற இவருடைய கதை உலகம் படைத்துத் தருவது. சமூக வாழ்க்கையின் விளிம்பிலும் மூலையிலும் கிடக்கும் வறியவர்களையும்  கீழ்தட்டு மக்களையும் திருடர்களும் சிறைக்கைதிகளையும் பாலியல் தொழிலாளர்களையும் கவலையுற்றவர்களையும் ஒன்றுபடாத மனிதர்களையும்தான்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் : வைக்கம் முகம்மது பஷீர் நூல் வாங்க

முந்தைய கட்டுரைபறவைபார்த்தலும் குழந்தைகளும் 
அடுத்த கட்டுரைநாதஸ்வரத்தை ரசிக்கும் முறை- கடிதம்