ஏன் பின்நவீனத்துவம் கடக்கப்பட்டாகவேண்டும்? – அஜிதன்
மருபூமி வாங்க
மருபூமி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். அண்மையில் பின்நவீனத்துவம்- டிரான்ஸ்மாடர்னிசம் பற்றிய அஜிதனின் உரை, உரையாடல் இரண்டையும் கேட்டேன். கட்டுரைகளில் ஏராளமான செய்திகளை எழுதுபவர்கள் பேசும்போது குளறுபடி செய்வதை கண்டிருக்கிறேன். காரணம் அவர்களுக்கு அதெல்லாம் சரியாகப் புரியவில்லை என்பதுதான். பெரும்பாலும் பார்த்து எழுதுவதுதான் அதெல்லாம். தெளிவாகப்படித்தவர்களுக்குத் தெளிவாகச் சொல்லவும் எழுதவும் தெரிந்திருக்கும். மொழிக்குழப்பம் இருந்தாலே விஷயம் புரிபடவில்லை என்றுதான் பொருள். அஜிதனிடம் இருக்கும் தெளிவான திட்டவட்டமான குரல் அவர் மிகக்கூர்மையாக, நீண்டநாட்கள் உழைத்து இவற்றையெல்லாம் கற்றிருக்கிறார் என்பதற்கான சான்று. வாழ்த்துக்கள்.
அத்துடன் இந்தவகையான கோட்பாட்டு விவாதங்களில் அவற்றைப் பேசுபவர்களிடம் ஓர் எக்களிப்பு இருக்கும். அவர்கள் மிகப்புதிய எதையோ கொண்டுவந்து வைப்பதாகவும், அவர்கள் இதுவரை பேசிய எல்லாவற்றையும் கடந்துவிட்டதாகவும் பாவனை செய்வார்கள். மெய்யாகவே தத்துவம் பயின்றவர்களிடம் அந்தப்பாவனை இருக்காது. தத்துவத்தின் எல்லைகளும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்
தமிழில் பின்நவீனத்துவம் -பின் அமைப்புவாதம் பேசியவர்கள் எல்லாருமே அதை இலக்கியம், கலை, நுண்ணுணர்வு எல்லாவற்றையும் ‘கட்டுடைத்துவிட்டதாகவே’ முன்வைத்தார்கள். காதல் போன்ற உணர்வுகளையும் அறம் போன்ற விழுமியங்களையும் உடைத்துவிட்டதாகச் சொன்னார்கள். அவ்வாறன்றி, தத்துவத்தை முறையாகக் கற்ற ஒருவர் தெளிவான ஆதாரங்களுடன் மானுட அடிப்படைகளை முன்வைத்துப் பேசுவதும், கோட்பாடுகளை அவற்றைப் புரிந்துகொள்ள மட்டுமே பயன்படுத்துவதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஸ்ரீ
அஜிதன்
பின்நவீனத்துவம் பின்னகர்ந்த பின்… அஜிதன் உரை
அஜிதன் சிறுநேர்காணல் – அகரமுதல்வன்