தென்னிந்திய மொழி இலக்கியங்களுக்கான புக்பிரம்மா இலக்கிய விழா பெங்களூரில் வரும் 9 ஆகஸ்ட் 2024 முதல் நிகழவிருக்கிறது. அமைப்பாளர்களில் ஒருவராகப் பாவண்ணனும் இருப்பதனால் அனேகமாக எனக்குத்தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே பங்குகொள்கிறார்கள். பலருக்கு இது முதல் இலக்கிய விழா என நினைக்கிறேன்
நிகழ்வுகளெல்லாமே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நிகழும். ஆகவே அனைவரும் பங்குகொள்ளலாம்.
ஆகஸ்ட் 9 அன்று நிகழும் தொடக்கவிழாவில் கலந்துகொள்கிறேன். எச்.எஸ்.சிவப்பிரகாஷ், வோல்கா, விவேக் ஷன்பேக் மற்றும் கே.சச்சிதானந்தன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். 11 ஆம் தேதி நிறைவு விழாவிலும் கலந்துகொள்கிறேன்
நான் 8 இரவே பெங்களூர் வந்து 12 காலைதான் கிளம்பி ஈரோடு செல்கிறேன். ஈரோடு தமிழ்விக்கி -தூரன் விருது விழா முடிந்து ஊர் திரும்புவேன்.