தமிழ் விக்கி – தூரன் விருதுவிழா இன்று மாலை 5 மணி முதல் ஈரோடு கவுண்டச்சிப் பாளையம் ராஜ்மகால் அரங்கில் நிகழவுள்ளது. தமிழகத்திலிருந்தும் வெளியிலிருந்தும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். மாலை இரு ஆய்வாளர்களின் அரங்குகள். நாளை மீண்டும் ஆய்வரங்குகள் காலை 9 மணிக்கு தொடங்கும்.
அனைவரும் வருக!
நண்பர்களுக்கு
வணக்கம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ விழா ஈரோட்டில் நிகழவிருக்கிறது.
தமிழ்ப்பண்பாட்டாய்வில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருதை சுவடியியல் ஆய்வாளர் மோ.கோ.கோவைமணி அவர்களுக்கு வழங்குகிறோம்.
நிகழ்வு நாள், பொழுது: ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை.
நிகழ்வு இடம்: ராஜ்மகால் திருமணமண்டபம், கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை. ஈரோடு
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
1. கல்வெட்டு அறிஞர் வெ. வேதாசலம்
2. குகை ஓவிய அறிஞர் காந்திராஜன்
3. காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன்
4. மலையாள விமர்சகர் எம். என். காரசேரி
5. விருதுபெறும் முனைவர் கோவைமணி
ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
விருதுவிழாவை ஒட்டி வழக்கம்போல சிறப்பு நாதஸ்வர நிகழ்வு நடைபெறும். பெரியசாமித் தூரன் அவர்களின் தமிழிசைப்பாடல்களை சின்னமனூர் ஏ.விஜய்கார்த்திகேயன், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜா ஆகிய இசைக்கலைஞர்கள் வாசிப்பார்கள். இரண்டு மணி நேரம் இந்த இசைநிகழ்வு நடைபெறும்.
இந்நிகழ்வுக்கான பாடல்கள் முன்னரே அளிக்கப்பட்டுள்ளன. இந்த இசைநிகழ்வில் கலந்துகொள்பவர்கள் அவ்விசைப்பாடல்களை கேட்டுவிட்டு வருவது இசைக்குள் நுழைவதற்கு மிக உதவியானதாக அமையும்.
பார்க்க
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்