அன்புள்ள ஜெ
வெண்முரசு நூல்கள் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ள செய்தியை அறிந்தேன். அவை தயாராகிவிட்டனவா? மொத்தமாக வாங்கக் கிடைக்கின்றனவா என அறிய விரும்புகிறேன்
வீரமணி முருகன்
அன்புள்ள முருகன்,
வெண்முரசு நூல்கள் முழுமையாக தயாராகி முன்பணம் கட்டியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவை இரண்டு பெரிய பெட்டிகளிலாக அனுப்பப்படுகின்றன. ஒருநாளைக்கு 25 பெட்டிகளைத்தான் கட்டமுடியும். 50 விலாசங்களுக்கு ஒரே சமயம் அனுப்பப்படுகின்றன. நடுவே விடுமுறைகள். ஆகவே நாலைந்து நாட்களில் எல்லாம் அனுப்பப்படும் என நினைக்கிறேன்.
வெண்முரசு நூல்கள் தயாராகவே உள்ளன. பலர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
ஆக 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா நிகழ்வில் வெண்முரசு நூல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் பிற நூல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.