கோவைமணி- வாழ்த்துக்கள்

அன்புமிக்க ஜெயமோஹன் அவர்களுக்கு,

தூரன் விழா அழைப்பிதழ் கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

திரு தூரன் அவர்களை நான் இளைஞனாக இருந்தபோது அறிவேன்கஸ்தூரிபாநகரிலிருந்த அவர்கள் இல்லத்துக்கும் சென்றிருக்கிறேன்நாங்கள் பாரதி விழா கொண்டாடியபோது (1951-52) தூரன் அவர்கள் தலைமை வகித்து நடத்திக்கொடுத்தார்கள். கல்கி விழாவிலும் பங்கு கொண்டார்

விழாவில் கலந்துகொள்ள மனம் துடிக்கிறதுஉடல் மறுக்கிறது.முதுமை (நான் 92) காரணமாக பயணம் செய்ய முடியவில்லை.தூரன் விழா சிறப்புற நடைபெற என் வாழ்த்துகள்நான் ஆசியும் வழங்கலாம்தானே.

அன்புடன்

சு. கிருஷ்ணமூர்த்தி

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,

உங்கள் வாழ்த்துக்களே போதுமானவை. எங்களுக்கும் திரு கோவைமணி அவர்களுக்கும்

ஜெ

அன்புள்ள ஜெ

முனைவர் கோவைமணி அவர்களுக்கு தமிழ்விக்கிதூரன் விருது அளிக்கப்படும் செய்தி நிறைவளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

திரு கோவைமணி அவர்களைப் பற்றி இந்த விருது வழியாகவே அறிந்தேன். சுவடியியல் போன்ற துறைகள் இன்றைய அரசியலுடன் சம்பந்தமற்றவை. நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்கறை கிடையாது. ஆகவே அந்த துறைகளைப் பற்றிய அறிமுகமே நம் சூழலில் இல்லை. இத்தகைய விருதுகள் வழியாக நாம் அவர்களை அறிந்துகொள்கிறோம். தமிழ் விக்கி அமைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

திரு கோவைமணி அவர்களின் இரண்டு பேட்டிகளை பார்த்தேன். மிக ஆழமான முறையில் தன்னுடைய துறை பற்றிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். அவருடைய ஒரு நூல் இணையத்தில் உள்ளது. அதையும் வாசித்தேன். சுவடியியல் பற்றிய ஒரு முழுமையான அறிமுகம் அந்த நூல்

திரு கோவைமணி அவர்களின் விழாவுக்கு நேரில் வந்திருந்து வாழ்த்த ஆசை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன். அவருக்கு என் வணக்கம்

ஜெயராகவன்

முனைவர் கோவைமணி – தமிழ் விக்கி

கட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப் படவில்லை… கோவைமணி பேட்டி

உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் – கோவைமணி நேர்காணல்

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு – மோ.கோ. கோவைமணி

பருவ இதழ் சுவடிப்பதிப்பு – கோவைமணி நூல். ஆர்கைவ்ஸ் இணையதளம்

முந்தைய கட்டுரைChurning the Sea!
அடுத்த கட்டுரைபசுமையும் மழையும் – கடிதம்