தூரன் விழா இசைமரபு- கடிதங்கள்

திருமெய்ஞானம் ராமநாதன், சென்ற ஆண்டு வாசித்த கலைஞர்

தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்

தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு தமிழ் விக்கி தூரன் விருதுவிழாவில் வாசித்த திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன்,
பாண்டமங்களம் ஜி.யுவராஜ்  இசையை நேரில் வந்திருந்து கேட்டேன். அருமையான கூடம். அமைதியான சூழல். மைக் இல்லாமல் மிதமாக ஒலித்த நாதஸ்வரம். மயங்கவைக்கும் அந்த கம்பீரம். இரண்டு மணிநேரம் ஒரு தெய்வீகமான அனுபவம். நாதஸ்வரம் என்றால் என்ன என்று அன்றுதான் உண்மையாகவே உணர்ந்தேன்.

இந்த ஆண்டும் இரண்டு நாதஸ்வர இசைமேதைகளை அடையாளம் காட்டுகிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்

செந்தில்ராஜ்

பாண்டமங்களம் யுவராஜ் சென்ற ஆண்டு வாசித்த கலைஞர்

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி -தூரன் விழாவை ஒட்டி நிகழும் நாதஸ்வர இசைநிகழ்வு ஒரு மரபாக மாறிவிட்டிருப்பது நிறைவளிக்கிறது. நல்ல முறையில் ஒரு நாதஸ்வரம் கேட்க இங்கே எந்த வாய்ப்பும் இல்லை. நாதஸ்வர இசை முன்புபோல சிடிக்களாக வருவதுமில்லை. வானொலியில் வந்தால்தான் உண்டு. சென்ற ஆண்டு நீங்கள் முன்னிறுத்திய திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன், பாண்டமங்களம் ஜி.யுவராஜ்  ஆகிய கலைஞர்களின் இசையை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். நாதஸ்வர இசையைப்போல நம் கவனத்தை முழுமையாக நிறைத்து நம்மை ஆட்கொள்ளும் இசை வேறு இல்லை என்பது என் எண்ணம்.

இந்த மரபு தொடரவேண்டும்.

ஆ. சிவமணி

தூரன் இசை-“நாதம் எழுக!” அகரமுதல்வன்

தூரன் விருது- இசை நிகழ்வு

 

முந்தைய கட்டுரைஈரோட்டில் வெண்முரசு நூல்கள்
அடுத்த கட்டுரைபஷீரும், முகைதீனும்