தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசைக் கலைஞர்கள்
ஜெ,
பெரியசாமி தூரன் விருது-2024 விழாவில் நாம் ஒருங்கிணைத்து உள்ள சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியில் வாசிக்க இருக்கும் கீர்த்தனைகள் விபரம்.
இசை குழுவினர் குறித்த தகவல்களை தனி மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
யோகேஸ்வரன் ராமநாதன்
நிகழ்வுமுறை : பாடல்கள்
முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம்
கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.
கீர்த்தனைகளின் பட்டியல், ராகம், தாளம் மற்றும் பாடலுக்கான யூடியூப் லிங்க்
ஆகியவை கீழே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை சிலமுறை கேட்டுவிட்டு வருவது நாதஸ்வர நிகழ்வை முழுமையாக ரசிக்க உதவியாக அமையும். தெரிந்த பாடல் வழியாக கருவியிசையை கேட்பது அந்த இசைக்குள் செல்வதற்கான சிறந்த வழிமுறை. நாதஸ்வரத்தை இப்படி கேட்க ஆரம்பிப்பவர்கள் தமிழின் மகத்தான கலைவடிவம் ஒன்றுக்குள் நுழையும் அனுபவத்தை அடைகிறார்கள்.பட்டியலில் உள்ள சில பாடல்களுக்கு இணையத்தில் இணைப்புகள் இல்லை. அவை குரல்பதிவு செய்யப்பட்டு அதற்கான சுட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன.
ராக ஆலாபனை : முதன்மை ராக ஆலாபனை ”ஆனந்தபைரவி” ராகத்தில்
அமைக்கப்பட்டு இருக்கும்.
ராகமாலிகை : ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி முதல் பள்ளியறை பூசனை வரை மரபாக வாசிக்க வேண்டிய ராகங்கள் பௌளி முதல் மத்யமாவதி வரை தோராயமாக ஐம்பது ராகங்கள் ராகமாலிகையாக வாசிக்கப்படும்.
காண்க : Ragamalika – Nagaswaram A.Vijay karthikeyan & V.Prakash Ilayaraja
கீர்த்தனைகள் பட்டியல் :
1):கீர்த்தனை: கலையின்பமே நிறையின்பமாம். ராகம்: ஹம்ஸத்வனி. தாளம்: ஆதி
(https://youtu.be/EGiVcD22lq0?si=WJa4AUui79q3hX1e)
2): கீர்த்தனை: கால காலன் கயிலை நாதன். ராகம் : அடாணா. தாளம் : ரூபகம்
(https://youtu.be/0VhrIUGJOTI?si=tNKBs5FYHzoW4ruB)
3): கீர்த்தனை: புண்ணியம் ஒரு கோடி புரிந்தேனோ. ராகம்: கீரவாணி. தாளம்: ஆதி
(https://youtu.be/NOT20qTW-dU?si=X26p53OfA_40-vnN)
4): கீர்த்தனை: வெண்ணெய் உண்ணும். ராகம் : காம்போஜி. தாளம் : ஆதி
(https://youtu.be/FEAD8p5HrDs?si=bQsqOlCbs9p13r1g)
5): கீர்த்தனை: குன்றுருவ வேல் வாங்கி.ராகம் : கல்யாணி. தாளம் : கண்ட சாபு
6): கீர்த்தனை: கொஞ்சி கொஞ்சி வா குகனே.ராகம் : கமாஸ். தாளம் : ஆதி
(https://youtu.be/R7rm9usX44U?si=jpkv6L3p5yJ9V43M)
7): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : ஆனந்தபைரவி
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீ. தாளம்:ஆதி
(https://youtu.be/lJ8Do3qqWmw?si=f55gWQdl74ttFLPM)
8): கீர்த்தனை: பழனி நின்ற பரமன் தந்த. ராகம் : காபி. தாளம் : ஆதி
(https://youtu.be/stgZM3VdtBE?si=3FRTyiFmBRBn18ft)
[தொடர்ந்து ராகமாலிகை]
(Ragamalika – Nagaswaram A.Vijay karthikeyan & V.Prakash Ilayaraja)
9) : காவடிசிந்து : அரனுமாகி ஹரியுமாகி. ராகம் : செஞ்சுருட்டி. தாளம் : மிஸ்ரசாபு
(https://youtu.be/ImIcZNA23DM?si=9Im-_YA4Vj-Xp8Em)
10): மங்களம்: தென்பழனி வேலவனே. ராகம் : மத்யமாவதி. தாளம் : கண்டசாபு