சுனையில்… கடிதம்

அன்புள்ள ஜெ

முதற்கனலை வாசித்தேன். நம் புராணங்கள் எந்த நம்பிக்கைகளை, அறங்களைப் போதிக்கின்றன என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் அரசியலும் சமூக பார்வைகளையும் பொருத்து மாறுபடலாம்ஆனால்கலையைத் தேடுபவர்களுக்கு அது பெரிய உணர்ச்சிகளையே கடத்துகிறதுமனித உறவுகளின் அதன் நாடகங்களின் முடிவில்லா ஆட்டத்தை எதிலாவது தொடர்புகொண்டு அதிலிருந்து மேலேறி இன்னும் வாழ்க்கையின் மெய்யென அறிய அல்லது வழி என ஒன்று உண்டா என்கிற தேடலில் நுழைய புராணங்கள் மிகமுக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன

இன்றும் மகாபாரதம்ராமாயணம் தொடர்புடைய கதைகள் இல்லாத தெருக்கூத்து அரிதுஎங்கோ இருந்து எவ்வளவோ முன்னேறிய பிறகும் இன்றும் அக்கதாபாத்திரங்களின் அறமும்கீழ்மையும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றனஏன்?ஒவ்வொருவரும் காவிய நாயகர்களில் தங்களைப் பொருத்தி போலியான அவனிலிருந்து மிகையான உணர்ச்சிகளை உருவாக்கிக் கொள்கிறான். இவர்கள் என்னைப்போல் இன்னொரு மனிதன் இல்லை. எங்கோ, எப்போதோ வாழ்ந்த அல்லது வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டவன் என்கிற முதல் எண்ணமே ஆணவத்திலிருந்து விடுதலைதானே?

உயிரனங்களின் முதல் முழுத்தீ என்பது காமமும் குரோதமும்தான். நல்லவன், தீயவன், ஏழை, அசடன் என மனிதர்களை எந்த வகைக்குள் அடைத்தாலும் ஒன்றுபோல் எல்லாரிடமும் இருக்கும் ஆதி உணர்வுகள் இவை. முதற்கனல் நாவல் அந்த உணர்ச்சிகளின் பெருக்கையே பேசியிருக்கின்றன. பீஷ்மர் எவ்வளவு பெரிய விரதராக இருந்தாலும் அம்பையின் அழகையும் திறனையும் கண்டு ஒரு கணமேணும் தடுமாறிய இடத்தைச் சுட்டிக்காட்ட நவீன இலக்கியம் தேவைப்படுகிறது.

வெண்முரசு வரிசையின் முதல் நாவலான முதற்கனல் அன்னையிடமிருந்து துவங்கினாலும் மகன்களுக்கும் தந்தைகளுக்கும் இடையேயான தங்க நரம்பை மென்மையாக அழுத்தி அழுத்தி இவையனைத்தும் குருதிக்காகவே என்கிற மையத்தை சென்றடைகின்றன. விசித்திர வீரியனின் பகுதிகள் நிறைவானவை. அன்பின் புறக்கணிப்பை அடைகிறவன் விரைவாக கருணையை நோக்கி நகர்கின்றான். சுனை நீர் ஒன்றில், தன்னைப்போலவே உடல் முழுக்க கிழங்குபோல் குழைந்திருக்கும் இருக்கும் கந்தர்வனைப் பார்த்ததும் மனம் இளகி, ‘ஏன்’? என்கிறான்.

பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என பதில் வருகிறது

இது, பெரும் புனைவு மட்டுமே என ஒதுக்கிவிட முடியாமல், தத்துவார்த்த ரீதியாகவும்  வெண்முரசு உரையாடுகிறது. ஒரு உதாரணம், ”முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்”.

நீயே நான்அதுவாகவே இருக்கிறாய் என்கிற தத்வமஸியின் முழுமை பீஷ்மர்சிகண்டிக்கு சரியாக பொருந்துகிறது. முதற்கனல் நாகம்போல் எப்போது சீறும் எனத் தெரியாத விதியைப் பேசுகின்றன.

மகாபாரதம் ஒரு மதத்தைச் சூழந்து உருவாகியிருந்தாலும், ஒரு கதை எத்தனையாயிரம் ஆண்டுகளாக சுழன்று இன்றும் ஒருவனை ஆச்சரியப்படுத்துகிறது என்கிற வியப்பை அடையாமல் இருக்க முடியவில்லை. விரைவில், வெண்முரசை வாசித்து முடிக்க வேண்டும்

சங்கர் சதா

முந்தைய கட்டுரைசிந்தனையும் சிடுக்கும்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்: க.த. காந்திராஜன்