தமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்:எம்.என்.காரஸேரி

தமிழ்விக்கி- தூரன் விருது இந்த ஆண்டு முனைவர் கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை ஈரோட்டில் நிகழ்கிறது. விழாவில் மலையாள இலக்கிய விமர்சகரும், சொற்பொழிவாளரும், அரசியல்செயல்பாட்டாளருமான எம். என்.காரஸேரி கலந்துகொள்கிறார்.

எம்.என்.காரஸேரி (முகையத்தீன் நடுக்கண்டியில்)  மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் அரசியல் செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். அரசியலில் எவ்வகையிலும் மதம் கலக்கப்படலாகாது என்னும் கருத்தை முன்வைத்து மதேதர சமாஜம் என்னும் அமைப்பை அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.கோழிக்கோடு சாலியாறு நீரை பாதுகாப்பதற்கான சூழியல் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

எம்.என். காரஸேரி

எம்.என். காரஸேரி
எம்.என். காரஸேரி – தமிழ் விக்கி

 


முந்தைய கட்டுரையான் அறக்கட்டளை, ஒரு நகர்வு
அடுத்த கட்டுரைவழிபாடுகளும் குறியீடுகளும் பொருளுள்ளவையா?