தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு

தமிழ்விக்கி -தூரன் விருதுவிழா ஆகஸ்ட் 14-15

மோ.கோ.கோவைமணி தமிழ் விக்கி

பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி

தமிழ் விக்கி

தமிழ் விக்கி தூரன் விருது

நண்பர்களுக்கு,

இலக்கியம் – பண்பாட்டு ஆய்வுகளுக்கான தமிழ் விக்கி -தூரன் விருது 2024 ஆம் ஆண்டில் சுவடியியல் ஆய்வாளர் முனைவர் கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது விழா ஈரோட்டில் நிகழ்கிறது.

வழக்கம்போல இது ஒரு இரண்டுநாள் விழா. 14 ஆகஸ்ட் மாலையிலேயே நிகழ்வு தொடங்கும். அறிஞர்களுடனான உரையாடல் அமர்வுகள் 14 ஆகஸ்ட் மாலையிலும் பின்னர் 15 ஆகஸ்ட் மதியம் வரையிலும் நிகழும். அதன்பின் வழக்கம்போல தூரன் எழுதிய தமிழிசைப்பாடல்களால் ஆன நாதஸ்வர இசை நிகழ்வு. 15 ஆகஸ்ட் மாலையில் விருது வழங்கும் விழா.

இவ்வாண்டு பங்குகொள்ளும் ஆய்வாளர்கள்

1. கல்வெட்டு அறிஞர் வெ. வேதாசலம்

2. குகை ஓவிய அறிஞர் காந்திராஜன்

3. காட்டுயிர் ஆராய்ச்சியாளர். ஜெகநாதன்

4. மலையாள விமர்சகர் எம். என். காரசேரி

5. விருதுபெறும் முனைவர் கோவைமணி

இந்த நிகழ்வு நடக்கும் ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு ராஜ் மஹால் கல்யாணமண்டபத்தில் வழக்கம்போல வாசகர்களும் நண்பர்களும் ஆகஸ்ட் 14 அன்று இரவு அங்கே தங்கலாம். எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட விஷ்ணுபுரம் நண்பர்கள் அங்கு தங்குவார்கள்

 தங்க விரும்புபவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://forms.gle/Wk3F2SxdbwHKmbuL8

தொ எண்: 9500384307

விழாவிற்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்,

ஈரோடு.

முந்தைய கட்டுரைஇயல் ஏற்புரை
அடுத்த கட்டுரைGANDHI AND SEX