2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் முனைவர். மோ.கோ.கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விருதுவிழா வழக்கம்போல இரண்டுநாள் விழாவாக ஈரோட்டில் நிகழும். ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை விழா. ஆகஸ்ட் 14 மாலை முதல் வெவ்வேறு களங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுடனான சந்திப்பு அரங்குகள் நிகழும். ஆகஸ்ட் 15 அன்று சென்ற ஆண்டைப்போலவே முதன்மையான நாதஸ்வர இசை நிகழ்வு. மாலையில் விருது விழா.
தமிழ்விக்கி தமிழ்ப்பண்பாட்டு ஆவணத்தொகுப்பான இணையக் கலைக்களஞ்சியம். 2022ல் தொடங்கப்பட்ட இந்த கலைக்களஞ்சியத்தின் சார்பாக ஆண்டுதோறும் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவருக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தின் தந்தையான பெரியசாமித் தூரன் நினைவாக அவருடைய ஊரான ஈரோட்டில் இவ்விருது அளிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான விருது முனைவர். கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான விருது மு.இளங்கோவனுக்கும் இளம் ஆய்வாளருக்கான விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கும் வழங்கப்பட்டது.
கோவைமணி தமிழின் முதன்மையான சுவடியியல் அறிஞர். பழைய தமிழ்ச்சுவடிகளை பேணுவது, ஆவணப்படுத்துவது, ஆய்வுக்குறிப்புகள் தயாரிப்பது ஆகிய பணிகளில் 33 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்கிறார்.
(தொடர்புக்கு [email protected] , 9042511390)
பண்பாட்டு ஆய்வாளருக்கான விருதை கோவைமணி அவர்களுக்கு வழங்குவதில் தமிழ்விக்கி குழு பெருமைகொள்கிறது.
விருதுவிழா வரும் ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நிகழும்.
தமிழ்விக்கி குழு