எம்.கே.மணி தமிழில் விசித்திரம் என சொல்லத்தக்க சில நல்ல கதைகளை எழுதிய படைப்பாளி. கதை நிகழும் களம், கதை சொல்லும் முறை மட்டுமல்ல கதைமாந்தரின் மனநிலையிலும் நாமறியாத ஒரு விந்தையான திருகல் கொண்ட கதைகள் அவை.
திரைக்கதையாசிரியர். சினிமா ஆர்வலர். என்னைப்போலவே மலையாள இடைநிலை சினிமாக்களின் ரசிகர். அவ்வப்போது கடிதங்கள் வழியாகத் தொடர்பு உண்டு. நேரில் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
சிறுநீரகக் கோளாறு சில ஆண்டுகளாக இருந்து வந்தது. டயாலிஸிஸ் செய்துவந்தார்.