இயல் ஏற்புரை

13 ஜூன் 2015ல் எனக்கு இயல் விருது கிடைத்தபோது ஆற்றிய உரை. அன்று காணொளி எடுக்கப்படவில்லை. உரை ஒலி வடிவில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாகப்போகிறது.அன்று வெண்முரசு எழுதத் தொடங்கியிருந்தேன். இன்று வெண்முரசே பழைய நினைவாக மாறிவிட்டிருக்கிறது. பழைய புகைப்படங்களை பார்க்கையில் இப்போதெல்லாம் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் கவனிக்கிறேன்.

ரவிச்சந்திரிகா அன்று அந்நிகழ்வைப் பற்றி எழுதிய பதிவு இயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்.  அன்றைய நிகழ்வு பற்றிய ஒரு சுருக்கமான அறிக்கை. கலந்துகொண்டவர்களின் பட்டியல், நிகழ்வுகள் எல்லாமே அதில் சொல்லப்பட்டுள்ளன.

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி தூரன் விழா விருந்தினர்: வெ. வேதாசலம்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு