கோவைமணி, தமிழ்விக்கி தூரன் விருது- கடிதங்கள்

தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலம்தானே?

ஆய்வாளர் கோவைமணி அவர்களுக்கு தமிழ்விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் உங்களுக்குக் கடிதம் ஏதும் எழுதியதில்லை. தொலைவில் இருந்து உங்கள் பணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பவன் நான். உங்களுடைய பணி சிறக்கவேண்டும் என வாழ்த்துகிறேன். இங்கே பெரிய அமைப்புகளால்கூட செய்யமுடியாத, அல்லது அவர்கள் செய்யத்தவறிய ஒரு பெரும்பணியை தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அந்தப்பணியின் மதிப்பு எங்களைப்போன்ற சிலருக்காவது தெரியும் என கூற விரும்புகிறேன். நீங்கள் கோவைமணி அவர்கள் விருதுபெற்றதை ஒட்டி நிலவும் மௌனத்தைப் பற்றி எழுதியிருந்ததை  (தமிழ்விக்கி தூரன் விருது, நம் அறிவுச்சமூகம்)வாசித்தபோது இதை எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

சபாபதி மாணிக்கவாசகம்

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி – தூரன் விருது பெற்றிருக்கும் கோவைமணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்னாரின் பணி சிறக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

சென்ற சில மாதங்களாகவே அவரை அறிவேன். நான் சார்ந்துள்ள சைவ நிகழ்வு ஒன்றில் அவருடைய பேச்சைக் கேட்டேன். அவர் முதன்மையான சுவடியியல் அறிஞர் என்பதை அதன்பின்னர் அறிந்தேன். சுவடிகளை பதிப்பிப்பது, பாடவேறுபாடு நோக்குவது ஆகியவற்றில் அன்னார் ஆற்றிய அரும்பணி பற்றி அதன் பின்னர் அறிந்துகொண்டேன்.

சுவடியியல் என்பது பழமையைப் பாதுகாப்பது மட்டும் அல்ல. நம்முடைய மரபைப்பற்றிய சான்றுகளைப் பாதுகாப்பதுதான். வரும்காலத்தில் இச்சுவடிகளில் இருந்து மேலும் புதிய செய்திகள் எழுந்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

செல்வக்குமார் சிவா

தமிழ்விக்கி தூரன் விருது, நம் அறிவுச்சமூகம்

கோவைமணி – தமிழ்விக்கி தூரன் விருது: கடிதங்கள்

கோவைமணி தூரன் விருது, கடிதம்

கோவைமணி தூரன் விருது, கடிதம்

முந்தைய கட்டுரையோகியும் நானும்
அடுத்த கட்டுரைஆத்ம சூக்தம்