சென்ற நூற்றாண்டில் தியானம்,யோகம் ஆகிய இரண்டும் வெவ்வேறாக இருந்தன. யோகம் உலகியலை துறந்து ஞானத்தேடல் கொண்டவர்களுக்குரியதாக இருந்தது. தியானம் மூளையுழைப்பு சார்ந்த மிகச்சிலரால் மட்டுமே செய்யப்பட்டது, அவர்களுக்கே தேவையாகவும் இருந்தது.
இன்று சமூகத்தில் பெரும்பாலானவர்கள் மூளையுழைப்பு செய்பவர்கள், ஏதேனும் ஒரு மெய்த்தேடல் கொண்டவர்கள். இந்நூற்றாண்டுக்காக தியானமும் யோகமும் எளிமையாயின, ஒன்றுடனொன்று கலந்து புதியவழிகளை உருவாக்கிக் கொண்டன. இன்றைய நவீன வாழ்க்கையில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கான இடம் என்ன?
தில்லை செந்தில்பிரபுவின் தியானப்பயிற்சி நிகழ்வு
செப்டெம்பர் 27 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)
இப்போதே பதிவுசெய்யலாம் [email protected]