Stories Of the True Amazon
அன்புள்ள ஜெ,
அறம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்த கட்டுரை/விமர்சனப் போட்டி துவங்கிவிட்டது,
Seattle புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 மேல்நிலைப் பள்ளிகளிடம் ஏற்பு விண்ணப்பமளித்து ஒப்புதல் வாங்கி அவர்களின் வாராந்திர செய்தியோடை வழியாக இதன் விவரங்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொண்டு சேர்த்தோம், வந்த பதிவுகளில் பெரும்பாலானவை தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது வியப்பளித்தது. இங்குள்ள நூலகங்களிலும் போட்டியை விளம்பரம் செய்யப்போகிறோம்.
Seattle நகரை சுற்றியோ அல்லது அந்நகரில் நிகழப்போகும் பரிசளிப்பு நிகழ்வுக்கு எளிதாக வந்து செல்லக்கூடிய தொலைவிலோ வசிக்கும் நண்பர்கள் இந்த நிகழ்வைப பற்றிய விவரங்களை தங்கள் குடும்பத்திலோ சுற்றுவட்டத்திலோ உள்ள மாணவர்களுக்கு பகிரலாம். மின்னஞ்சலுடன் இணைத்துள்ள பதாகையை தளத்தில் பதிந்து நண்பர்களுடன் பகிருமாறு கோருகிறேன்
வலுவான நடைமுறைவாத அடித்தளம் கொண்ட அமெரிக்க கல்விமுறை உருவாக்கிய பதின்மர்களின் நோக்கில் கெத்தேல் சகிப்பையும், டாக்டர் கே வையும் பிறரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன், கொஞ்சம் நகத்தைக் கடித்தபடி தான், ஏனென்றால் இதன்மூலம் ஏதோ ஒருவகையில் என்னுடைய தனிப்பட்ட விழுமியங்களையும் அவர்கள் முன் விமர்சனத்துக்கு வைப்பதாக நினைக்கிறேன்.
அன்புடன்
ஷங்கர் பிரதாப்
அன்புள்ள ஷங்கர்
வந்த கட்டுரைகள் மற்றும் எதிர்வினைகளில் இந்திய – தமிழ்க்குழந்தைகள் குறைவு என்பது எதிர்பார்த்ததுதான். இந்தியக்குழந்தைகளுடன் ஒப்பிட அமெரிக்க இந்தியக் குழந்தைகளின் வாசிப்பு விகிதம் அதிகம். ஆனால் சராசரி அமெரிக்கக் குழந்தையுடன் ஒப்பிட அந்த விகிதம் மிகக்குறைவு. காரணம், இந்திய- தமிழ்ப்பெற்றோர் வாசிப்புக்கு எதிரான இந்திய மனநிலையையே குழந்தைகளிடம் உருவாக்குகிறார்கள். அந்த மனநிலையை மெல்ல மெல்ல மாற்றவேண்டும் என்று எண்ணுகிறேன்
ஜெ