அண்ணா -ஓர் உரையாடல்

[தமிழரான ஆங்கில எழுத்தாளரிடம் நிகழ்த்திய ஓர் உரையால்.]

P:  In spite of all his angularities Anna represents something noble about our Nation and its culture

me:  ஆம்

P:  I don’t support his bulldozing techniques

me:  angularities  என்பதும் அந்த நோபிள்தன்மையின் ஒருபகுதி.

P:  His space rightly belongs to the left. he in fact speaks their language But these idiots singularly lack leaders

me:  இங்கே எந்த கிராமத்திலும் ஒரு பாட்டா இப்படி இருக்கிறார் இல்லையா? முரட்டுப்பிடிவாதம் நேர்மை சுயநலமின்மை தான் சொல்வதே சரி என்ற மனநிலையுடன்?
அவர்களே கிராம மனசாட்சி..

P:  he says everybody should sacrifice a bit for the nation and the people believe him If Karunanidhi says this nobody will believe him

me:  நம் டெல்லிவாலாக்களுக்கு தெரியாவிட்டாலும் உங்களுக்கு தெரியும் நம் கிராமத்தவர் எப்படிப்பட்டவர்கள் என. கிராமவாசிகளைப்போல எதையுமே காதுகொடுக்காத, சுயநலம் மிக்க, சிறுமையில் ஊறிய மக்களை பார்ப்பது அரிது. அவர்களிடம் மோதி அவர்களை தன் வழிக்கு திருப்பி தான் விரும்பிய ஒரு சமூக மாற்றத்தைக்கொண்டுவர அண்ணா போன்றவர்கள் தங்களை மிகமிக கடினமானவர்களாக ஆக்கிக்கொள்ளாமல் முடியாது

அபாரமான பொறுமையும் பிடிவாதமும் இருந்தாலொழிய அது சாத்தியமல்ல. ராலேகான் சித்தியில் அவர் எப்படி அதைச் சாதித்தார் என்பதே பிரமிப்பூட்டக்கூடியது

P:  That is fine, but he is not talking to villagers here.

me:  அந்த பிடிவாதம் அவரது இயல்பாக ஒன்றாக ஆகியிருக்கும்…அதை அவரால் மாற்றிக்கொள்ள முடியாது

P:  the beauty of Gandhi is that he knew when to stop.

me:  ஆம். ஆனால் அவர் அங்கே ’மோல்ட்’ ஆனவர்

P:  that is his nature. We will have to accept him for what he is

me:  ஆம். காந்தி முறையான அரசியல் அறிந்தவர்

P:  the same stubborn integrity! I was in Ramlila ground there is no doubt that RSS is supporting him. but that is fine

me:  ஆனால் எப்போதும் காந்தி நாம் விரும்புவதுபோல நிகழ முடியுமா? பிரபு குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞருக்கு படித்த ஐரோப்பிய தன்மைகொண்ட அந்த காந்தி….சேற்றில் வேட்டியை வரிந்து கட்டி வேலைசெய்யும் இந்தக்காந்தி வேறு– இது நம் விவசாயியின் பிடிவாதம் மூர்க்கம்

P:  you are right.My only worry is that we may lose him. He speaks a language which I haven’t heard for a long time

me:  நேற்று ஒரு விவசாயியை கண்டேன். 82 வயது. மொத்த விவசாயமும் நஷ்டம். மகன் சென்னையில் டாக்டர். இவர் நிலத்தை விற்றுவிட்டு செல்வதாக இல்லை. விவசாயத்தை விடுவதாகவும் இல்லை. தன்னந்தனியாக பிடிவாதமாக விவசாயம் செய்கிறார். கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. ஊரே சொன்னாலும் புரிவதில்லை. வெள்ளாமய விட முடியுமா, விட்டா சோறு ஏது- என்ற ஒரேவரியை 30 வருடமாகச் சொல்லிவருகிறார்
.
P:  they make our nation

me:  ஆம்

P:  He should be taken away and fed forcefully… the politicians will not change

me:  ஆனால்… புரியவில்லை…என்ன சொல்வதென்று.

P:  My wife doesn’t want to eat at all .she is not political. she says it is difficult for me to eat when an old man is fasting

me:  ஆனால் நம் ஊடகங்களில் சிலர் அவர் படிக்காதவர் என்று சொல்வதைக்கேட்கும்போது வரும் எரிச்சல் சாதாரணமல்ல. அருந்ததி ராயின் கட்டுரை முழுக்க அந்த தோரணைதான். ஆங்கிலம் பேசத்தெரிந்திருப்பதனாலேயே தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொள்ளும் போலித்தனம் என்று நம் நாட்டைவிட்டு செல்லுமென்றே தெரியவில்லை

P:  I didn’t like the arrogance of that article

me:   உங்கள் மனைவியைப்போல பலகோடிப்பேர். உண்மையில் இது ஒரு முக்கியமான வரலாற்றுத்தருணம். எத்தனைபேர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

P:  As I said i was in Ramlila and there are many ordinary people there. Even the police were very polite.

me:  காந்தி சட்டென்று கோடிகணக்கான சாதாரண விவசாயிகளையும் பெண்களையும் அரசியல்படுத்தினார். அண்ணாவின் போராட்டம் இந்திய அரசியலில் ஒதுங்கி வாளா இருந்த ஒரு பெரும் வட்டத்தை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்
P:  I was trying to enter the ground and one police man said ‘sir, follow the rule. this is exit gate.’ I almost swooned!

me:  ))

P:  if this happens even for a few moments, it is ennobling.

me:  ஆம், அனைவருக்குமே உள்ளூர பண்புகள் உள்ளன. அவை வெளிவரும் தருணங்கள் நம் பொதுவாழ்க்கையில் குறைவு என்பதே உண்மை

P:But I anticipate a tragedy. I want to be wrong

me. நிகழாமலிருக்கவேண்டும்…..இன்றோடு அவர் உண்ணாவிரதத்தை முடிக்காவிட்டால் அவரது உயிருக்கும் ஆபத்து.  கூத்தடிக்கும் அரசியல்வாதிகளால் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை

எல்லாம் இன்றுடன் முடியும் என நினைக்கிறேன். அவரை இழப்பதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல. நம் சமூகத்தின் மிக ஆதாரமான ஒரு பண்புநலனின் அழிவு அது.

P:  I agree, but the idiots around him scare me.except perhaps Prashant Bhushan

me:  அவர்கள் பெரிதாக ஒன்றும் சொல்லமுடியாது…அண்ணா போன்ற ஒருவரிடம் எவரும் எதையும் வற்புறுத்தவே முடியாது… அதை பலர் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அவரை பலவீனமானவராகவே கற்பனைசெய்துகொள்கிறார்கள். அப்படி இருந்திருந்தால் அவர் இந்த இடம் வரை வந்திருக்க மாட்டார். அவரை என்ன, நம் வீட்டு பெரிசையே நம்மால் வற்புறுத்தமுடியாது. ஒரு குடும்ப விஷயத்துக்காக 80 வயதில் என் பெரியம்மா 12 நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்…

P:  I agree, but they present a public face which should be good

me:  aam

P:  Anna can have dictatorial overtones.but not his sidekicks

me:  ஆம்

P:  What was great about this movement is that there was a large presence of Dalits with Ambedkar’s photo.but not many Muslims

me:ஆம் அதை நானே ஊகித்தேன். அதனால்தான் சில தலித் தலைவர்கள் பதற்றமடைகிறார்கள்.. அவருக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது.

முந்தைய கட்டுரைதூக்கிலிரு​ந்து மன்னிப்பு
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.