ஒரு புதிய வரவு

அன்பான ஜெ,

நலம்தானே.

அன்பான ஜெ, ஜூலை மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது.

கே.பாலமுருகனின் ‘தேவதைகளற்ற வீடு’ சிறுகதை தொகுப்பு குறித்து ம.நவீன் விமர்சனக் கட்டுரை எஸ்.எம்.ஷாகீரின் ‘ஜொக்ஜாவில் அடைமழை‘ சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு ம.நவீனின் புதிய சிறுகதையான ‘வேம்படியான்‘  முகமது ரியாஸின் ‘சிகரி மார்க்கம்’ சிறுகதை தொகுப்பு குறித்து லதாவின் விமர்சனக் கட்டுரை சீ. முத்துசாமியின் ‘மண் புழுக்கள்’ நாவல் குறித்து அரவின் குமாரின் கட்டுரை கி.கோகிலவாணியின் நேபாள பயண அனுபவம் ஆகியவை வெளியாகியுள்ளன.

இதில் கிருஷ்ணை என்ற சிறுகதையை தாங்கள் வாசிக்க வேண்டும். புதிய எழுத்தாளர் சர்வின் செல்வா எழுதியுள்ளார். சர்வின், சுவாமி பிரம்மானந்த சரஸ்வரியால் இலக்கியம் வாசிக்கத் தொடங்கியவர். வெண்முரசு அவரை எழுதத் தூண்டியுள்ளது. இக்கதைக்கு முன்னரே ஒரு சிறுகதையை வாசிக்க அனுப்பியிருந்தார். அதிலும் வெண்முரசு தாங்கங்கள் ஆழமாக இருந்தன. இக்கதையில் அவரிடம் உருவாகி வந்துள்ள மொழி, வெண்முரசுவால் உருவானது.

கிருஷ்ணை சர்வின் செல்வா 

ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் வெண்முரசுவின் வழியாக தொடங்கி உருவாகி வருகிறார்கள் என்பதை மிகச்சிறந்த தொடக்கமாகப் பார்க்கிறேன்.

ம.நவீன்

 

அன்புள்ள நவீன்,

சர்வின் செல்வாவின் கதையை இப்போதுதான் வாசித்தேன். புதிய எழுத்தாளரின் முதல்கதை மிக நுணுக்கமான ஓர் அகநகர்வைக் கொண்டதாக இருப்பது வியப்பளிக்கிறது. பாலியல்கிளர்ச்சி படத்தில் இருந்து கரிய உடல் மெல்ல ஒரு sublime நோக்கிச் செல்வதை கதையின் ஒழுக்கினூடாக இயல்பாக நிகழ்த்தியிருக்கிறார். நல்ல கதை. வாழ்த்துக்கள்

ஜெ

 

 

ம.நவீன் / M.Navin

No Tel : 0163194522

web site : www.vallinam.com.my

blog : www.vallinam.com.my/navin/

முந்தைய கட்டுரைகோவைமணி தூரன் விருது, கடிதம்
அடுத்த கட்டுரைசாங்கியம்