ஜெகதீஷ்குமாரின் பொற்குகை ரகசியம் நூலின் வெளியீட்டுவிழா. வெளியீட்டுவிழாக்களில் அந்நூலைப் பற்றி விரித்து விவாதிப்பதை விட பொதுவான இலக்கிய உரையாகவும் அந்நூல் குறித்ததாகவும் உரையை அமைப்பதே நல்லது என்பது என் எண்ணம். ஆகவே இந்த உரையில் ஒரு தனியனுபவம் எப்படி இலக்கியத்தில் இடம்பெறலாம் என்னும் கோணத்தில் பேசியிருக்கிறேன்