தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் முனைவர். மோ.கோ.கோவைமணி   அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்விக்கி தமிழ்ப்பண்பாட்டு ஆவணத்தொகுப்பான இணையக் கலைக்களஞ்சியம். 2022ல் தொடங்கப்பட்ட இந்த கலைக்களஞ்சியத்தின் சார்பாக ஆண்டுதோறும் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவருக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தின் தந்தையான பெரியசாமித் தூரன் நினைவாக அவருடைய ஊரான ஈரோட்டில் இவ்விருது அளிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான விருது முனைவர். கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான விருது  மு.இளங்கோவனுக்கும் இளம் ஆய்வாளருக்கான விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கும் வழங்கப்பட்டது.

கோவைமணி தமிழின் முதன்மையான சுவடியியல் அறிஞர். பழைய தமிழ்ச்சுவடிகளை பேணுவது, ஆவணப்படுத்துவது, ஆய்வுக்குறிப்புகள் தயாரிப்பது ஆகிய பணிகளில் 33 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்கிறார்.

(தொடர்புக்கு [email protected] , 9042511390)

பண்பாட்டு ஆய்வாளருக்கான விருதை கோவைமணி அவர்களுக்கு வழங்குவதில் தமிழ்விக்கி குழு பெருமைகொள்கிறது.

விருதுவிழா வரும் ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நிகழும்.

தமிழ்விக்கி குழு

மோ.கோ.கோவைமணி தமிழ் விக்கி

பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி

தமிழ் விக்கி

தமிழ் விக்கி தூரன் விருது

கரசூர் பத்மபாரதி தமிழ் விக்கி

மு. இளங்கோவன் தமிழ் விக்கி

எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைவாசகர்கள் இல்லையா?
அடுத்த கட்டுரைஅஞ்சலி: எம்.கே.மணி