கிருபாலட்சுமி- முதல் கட்டுரை

வணக்கம் ஜெ,

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற புதிய வாசகர் சந்திப்பு என் எழுத்து பயணத்தில் மிக பெரிய திறப்பு. எழுத்தை மேம்படுத்த மேலும் எழுதுவதே ஒரே வழி. ஆனால் நம் எழுத்தை ஒரு ஆசிரியர் விமர்சிக்கும் போது அதில் உள்ள பிழைகள் திருத்தங்கள் அறியமுடிகிறது. ஒவ்வொரு முறை நாம் எழுதும் போதும் அதற்கு முன் செய்த பிழைகளை திருத்திக் கொள்வது நம்மை மேலும் முன் நகர்த்தி செல்லும். விமர்சனங்கள் இல்லையென்றால் நம் எழுத்திலும் தேக்கம் ஏற்படும் என்பதை அச்சந்திப்பில் புரிந்துகொண்டேன்.

ஜூலை மாத வல்லினம் இதழில் எனது கட்டுரைநீலம் மலர்ந்த நாட்கள்இடம்பெற்றுள்ளது. இதுவே பிரசுரமாகும் என் முதல் படைப்பு. கட்டுரைக்கு தலைப்பு யோசிக்கும்போது தளத்தில் நீங்கள் எழுதியநீலம் மலர்ந்த நாட்கள்கட்டுரை தொகுப்பு என் மனதில் தோன்றியது. இதுவே என்று பற்றிக்கொண்டேன்.

நான் தமிழ் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து என்னை இழுத்து செல்லும் விசை நீங்கள். சில காலங்களாக உங்களை நேரில் சந்தித்து உங்கள் உரையாடலை கேட்க முடியவில்லை என்றாலும் நவினின் வழியாக உங்களை மிகவும் அணுக்கமாகவே தொடர்கிறேன். கட்டுரை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிரவேண்டும். உங்கள் விமர்சனமே என்னை மேலும் வழிநடத்தி செல்லும்.

https://vallinam.com.my/version2/?p=9719

அன்புடன்,

கிருபா கிருஷ்ணன் 

முந்தைய கட்டுரைDoes Hinduism worship cows and trees?
அடுத்த கட்டுரைசு.அருண்பிரசாத்