சிலசமயம் சில எளிய, அடிப்படையான கருத்துக்களைக்கூட திட்டவட்டமாக விளக்கவேண்டியிருக்கிறது. அவை சொற்களை பிழையாகப் பயன்படுத்துவது என்று மேலோட்டமாகத் தோன்றும். உண்மையில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகம் கொண்டுள்ள உளச்சித்திரத்தில் உள்ள பிழையே அப்படி சொல்மயக்கமாக வெளிப்படுகிறது