நிகழ்வு புகைப்படத்தொகுப்பு :அம்ரே கார்த்திக்
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விழா உரையாடல்: காணொளிகள்
குமரகுருபரன், விஷ்ணுபுரம் விருது விழா- உரையாடல் அரங்கு
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா உரைகள்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு
வே.நி.சூர்யா, விருது – கடிதம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். நான் கலந்துகொள்ளும் முதல் இலக்கிய நிகழ்வு இது. இலக்கிய நிகழ்வுகள் என்றால் சலிப்பூட்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அந்த எண்ணம் பொய்யாகியது. காலை 10 முதல் இரவு எட்டு மணி வரை இலக்கியமனநிலையிலேயே இருந்தேன். நீங்கள் எழுதியதுபோல 6 மணிநேரம் தொடர்ச்சியாக கவிதை பற்றிய உரையாடல் நிகழ்ந்தது என்பது மிகுந்த ஆச்சரியம் ஊட்டும் விஷயம்தான்.
இந்த அரங்கில் கேட்ட பல விஷயங்கள் எனக்கு ஏராளமான சிந்தனைகளை அளித்தன. நீங்கள் சொன்னதுபோல கவிதைகளில் இப்போது ஒரு கனிவும் புன்னகையும் வந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இசை உயிர்மை பேட்டியில் அதைச் சொல்லியும் இருக்கிறார்.
அதேபோல செபாஸ்டியன் பேசும்போது மலையாளக் கவிதை இன்றைய கேரளக்கவிதையில் ஒரு பகுதியாக மட்டுமே ஆகியிருப்பதை அறிந்ததும் மிகுந்த ஆச்சரியமான விஷயம். தமிழில் அப்படி ஒரு ஜனநாயக மாற்றம் நிகழ்ந்தால் குறைந்தது 8 மொழிகளில் தமிழகக் கவிதை எழுதப்படும். தமிழ் அதில் ஒரு மொழியாகவே இருக்கும். நான் சோஷியல் வர்க்கர் என்பதனால் இதன் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.
அதேபோல தமிழிலுள்ள சௌராஷ்டிரா போன்ற சிறுபான்மை மொழிகளிலும் இலக்கியம் எழுதப்படுமென்றால் தமிழக இலக்கியம் இன்னும் பெரியதாக விரிந்துவிடும்
ஆர்.முத்துக்குமரன்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழாவுக்கு நானும் மனைவியும் வந்திருந்தோம். காலை 10 மணி முதல் மாலைவரை இத்தனைபேர் வந்து இலக்கியவிவாதங்களை கவனித்தது என்பது எனக்கெல்லாம் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்தது. எவரும் எழுந்துசெல்லவோ பேசிக்கொண்டிருக்கவோ இல்லை. அரங்கை கூர்ந்து கவனித்து எதிர்வினையாற்றினார்கள்.
விருது பெற்ற வே.நி.சூரியாவுக்கு வாழ்த்துக்கல்
கிருஷ்ணா முரளி
கடந்த ஞாயிற்றுக்கிழமை( 23 .06 .2024) சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்ற குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிஞர் விருது விழா ஒரு முழுநாள் மகிழ்வாக அமைந்து நிறைவு தரும் ஒன்றாக இருந்தது.
‘அது ஒரு வெல்டிங் வேலை!’ – குமரகுருபரன் விருது விழா!
அந்திமழை பதிவு