அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சியின் வடக்குப் பகுதியில் புதுப்பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் மடப்பள்ளி என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனக் கோவில் குருநாதசுவாமியின் ஆவேசத்தைக் கொண்ட சுயம்பு ஸ்தலம் என நம்பப்படுகிறது.
தமிழ் விக்கி அந்தியூர் குருநாதசுவாமி ஆலயம்