ஜெயமோகன் அவர்களுக்கு
இன்று பிபிசி இனையத்தில் பாட்காஸ்த் (Podcast) ஒன்றினை கேட்க நேர்ந்தது. கேட்க ஆரம்பித்தவுடன் உங்கள் வெள்ளை யானை நாவல்தான் நினைவிற்கு வந்தது.
https://www.bbc.co.uk/programmes/p0hd7scf
அந்த ஒலிப்பதிவின் இணைப்பை மேலே தந்திருக்கிறேன். நேரம் இருப்பின் கேட்டுப்பாருங்கள். இது 1943ல் நடந்த வங்கப்பஞ்சம் குறித்து பேசுகிறது. வெள்ளைய அரசு வங்கப்பஞ்சத்தை ஆவணப்படுத்துவதற்கு சுணக்கமெல்லாம் காட்டவில்லை. வலுக்கட்டாயமாக அதனைப்பற்றி பேசவே அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதித்துள்ளது. பஞ்சம் (famine) எனும் வார்த்தையை எழுத எந்த ஊடகங்களுக்கும் அதிகாரம் தரவில்லை. அந்த காலகட்டங்களில் வாழ்ந்த சில நபர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அது இதனை உறுதி செய்கிறது. நீட்டி எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க முயலவில்லை.
அன்புடன்
ரத்தினசிங்
ஐதராபாத்