அருந்ததியின் பொய்கள்

பிரபல ஆங்கில பத்தி எழுத்தாளர் அருந்ததி ராய் தி இண்டு ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை ‘நான் ஏன் அண்ணா அல்ல’ கிட்டத்தட்ட இந்திய அறிவியக்கத்தின் குரலாக சிஎன்என் போன்ற ஊடகங்களாலும் வெளிநாட்டு இதழ்களாலும் தூக்கிப்பிடிக்கப்பட்டது. முப்பதாண்டுகள் களப்பணியாற்றிய, தேசம்தழுவிய மக்களாதரவைப் பெற்றுள்ள அண்ணாவுக்கு ஊடகங்கள் அளித்த செய்தித்தொடர்பை ‘விளம்பரம்’ என சொன்னவர்கள் ஒரே ஒரு பல்ப் நாவல் மட்டும் எழுதிய, போதிய அரசியலறிவோ வாசிப்போ கள அனுபவமோ இல்லாத, இந்த பெண்மணிக்கு ஊடகங்கள் உலகமெங்கும் அளிக்கும் விளம்பரத்தின் உள்சதிகளை காணும் கண்ணற்றவர்களாக இருக்கிறார்கள்.

இங்கல்ல, இனிமேலும்கூட , எப்போதெல்லாம் இந்தியாவில் ஓர் ஆக்கபூர்வமான விஷயம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் இவரது எதிர்க்குரல் அவநம்பிக்கையும் வசைகளுமாக கிளம்பி வரும் என நான் நினைக்கிறேன்.

ஜன்லோக்பால் இயக்கத்துக்கு எதிராக இன்றைய தி ஹிந்து நாளேட்டில் அருந்ததி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் வழக்கம் போலவே திறமையாகவும், இந்த இயக்கத்தின் மைய விஷயத்தைக் கோட்டை விட்டிருக்கிறார், அதுவும் அவரது வழக்கம் போலவே. இந்தக் கட்டுரையில் நான் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பேசலாம் என்றிருக்கிறேன். இந்த இயக்கத்தைப் பற்றி அருந்ததி கட்டமைத்துள்ள பார்வையைவிட பரவலான பார்வை அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடுவதன்மூலம் நமக்குக் கிடைக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

அண்ணா ஹசாரேவுக்கான தமிழ் இணையதளத்தில் எழுத்தாளர் சூரியன் மொழியாக்கத்தில் Clear Visor என்பவரின் கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. பொய்களும் அவதூறுகளும் திரிப்புகளும் மட்டுமே அடங்கிய அந்த கட்டுரைக்கு இதைவிட நேரடியான பதில் இருக்கமுடியாது. அண்ணாவுடன் அங்கேயே இருந்த ஓர் இளைஞரின் பதில் இது


அருந்ததியின் பன்னிரு பொய்கள்

=============================

பழைய இணைப்புகள்


அண்ணா ஹசாரே கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?