அண்ணா ஹசாரே-கடிதங்கள்

தன்னைத்தவிர வேறு யாரும் தலைமைக்கு வரக் கூடாது என காங்கிரஸ் நினைக்கிறதா? சுதந்திரத்துக்குப் பிறகு ஒருவேளை தாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற நிலைமை இருந்திருந்தால், சுதந்திரமே வராமல் தடுத்திருக்குமோ காங்கிரஸ் என்ற சந்தேகம் வருகிறது.

ராமலிங்கம் நடராஜன் அன்புள்ள ஜெ..

பலரும் எழுதி விட்டார்கள். அருந்ததி கட்டுரையில் உள்ள தவறுகளைப் பிரித்து எழுதி விட்டார்கள் – வலைப் பூக்களில். இது போன்ற விஷயங்களில் நமது வாசகர்கள் நேர்மையாகவும், உடனுக்குடனும் பங்களிக்கிறார்கள். http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece

இந்த சுட்டியில் comments பார்க்க. விட்டுப்போன கருத்துகள் என்று எனக்கு தோன்றும் சில.. ஊடகத்தில் நடுநிலைமை என்றால், இரு தரப்பு (போல) தோன்றுகிற எழுத்துக்களை அப்படியே வெளியிடுவது. கருத்தின் தரம் பற்றி பரிசீலிக்காமலேயே.. (௨-ம்) மாவோயிஸ்ட்டையும் அண்ணா ஹசாரே இயக்கத்தையும், இரண்டுமே அரசாங்கத்தை தூக்கி எறியவே .. என்று சொல்லியிருப்பது.. இதில் பெரும் பிழை இருக்கிறதென்றும் அதை நேர்கொள்ள வேண்டுமென்றும் தோன்றுகிறது. மிக முக்கியமாக – வன்முறை வழி – அஹிம்சா வழி என்கிற வேறுபாடு இந்த நிலைபாடில் நுணுக்கமான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் உள்ளன. அருந்ததி அவர்கள், ஆதிவாசிகளுக்காக குரல் எழுப்புவது போலவும், இத்தகைய கருணை நோக்கினால் இந்த போராட்டம் அண்ணாவின் முயற்சியை விட சிறப்பான இடம் பெற வேண்டும் என்கிற கூவலாக.. இதற்கு ‘தி ஹிந்து’ வின் அங்கீகாரம் உள்ளது போல பாவனை. அண்ணா ஹசாரேயின் பிரபலத்தில் ஒரு பங்கு தனக்கும் தனது அறிவுபூர்வமான சிந்தனைக்கும் (போல தோற்றமளிக்கும்) தேவை என மன்றாடுவது போலிருக்கிறது. அருந்ததி தரும் புள்ளி விவரங்களில் நேர்மை இல்லை என தோன்றுகிறது. தனது வாதத்திற்கு சௌகரியமாக இடம் தரும் பழைய புள்ளி விவரங்கள் – அதன் மூலம் அண்ணா ஹசாரே இயக்கத்தை discredit செய்ய கோரும், சற்றே intellectual வாதம் போல தோற்றமளிக்கும் – ‘தி ஹிந்து’ வும் கடந்த பத்து நாட்களில் தலையங்கம் அருகே – நடு நிலைமை என்கிற பெயரில் அஹிம்சா மற்றும் சத்யாக்கிரக முறையைக் கூண்டில் ஏற்றும் கட்டுரைகள் – பகத் சிங்- பெரியார் கட்டுரைகள் –

உதாரணங்கள்: http://www.thehindu.com/opinion/op-ed/article2379711.ece http://www.thehindu.com/opinion/op-ed/article2356959.ece

இவை எல்லாவற்றையும் தாண்டி – எங்கள் வீட்டருகே – பள்ளி செல்லும் சிறுமிகள் சிறுவர்களுக்கு – ஜன நாயகத்தை பற்றி நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் பேசி பங்கு கொள்ள முடிகிறது என்கிற சாத்தியம் மிக அரிதானது.

ருதம் தப: (நேர்மை ஒரு தவம்) என்கிற நாராயணவல்லியின் கூற்று நினைவிற்கு வருகிறது

— M.Murali Consultant

அன்பின் ஜெ எம்.,

இன்று பகல் 12 மணியளவில் அண்ணாவை நேரில் காண ராம் லீலா மைதானம் சென்றிருந்தேன். உண்மையில் தங்கள் கட்டுரை வாசிப்புக்களே என்னிடம் அப்படிப்பட்ட ஒரு மனத் தூண்டுதலை-எழுச்சியை மிகுதியாக்கி விட்டிருந்தன. அங்கு நான் கண்ட காட்சி உண்மையில் ஒரு பரவசச் சிலிர்ப்பையே ஏற்படுத்தியது. ‘கூட்டப்பட்ட கூட்டம்’ அல்ல.அது,.’கூடும் கூட்டம்’என்பதைப் பார்த்த அளவிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் கட்டுரைகளின் உட் சாரம் என்னுள் தெளிவாக அர்த்தம் கொண்டது அப்போதுதான். எல்லா வர்க்கத்தினர், எல்லா வயதினர், பலவகையான அடையாளம் கொண்டோர்-இல்லாதோர் என அனைத்துத் தரப்பினரையும் அங்கே உண்மையான ஆர்வஎழுச்சியோடு காண முடிந்தது. குறிப்பாகப் பெண்கள் தரப்பு பற்றி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக இவ்வாறான போராட்டக் களங்களுக்கு வரத் தயங்கும் தன்மை கொண்ட நடுத்தர,மேல்மட்டப்பெண்களும் கூட[அடித்தட்டினரும் உண்டு] மெய்யான ஈடுபாட்டோடு – ஒரு கடவுளைத் தரிசிக்கும் பக்தைகளைப் போல அங்கே குழுமியிருந்ததோடு,கடந்த சில நாட்களாக தில்லியில் பெய்து வரும் மழையால் சேறாகிக் கிடந்த மைதானத்தையும் அழுக்கும் சகதியுமாய்க் கிடந்த தார்பாலின் விரிப்புக்களையும் கூடச் சட்டை செய்யாதவர்களாய் அங்கே அமர்ந்து பாடல்களை இசைத்தபடி குறுக்கீடாக வெறுமே வேடிக்கை மட்டுமே பார்க்க வரும் நபர்களைச் சற்று வெறுப்போடு துரத்திக் கொண்டிருந்தது ஆச்சரியம் அளித்தது. அலுவலகம் செல்லும் பெண்கள்,கல்லூரிப் பெண்கள் எனப்பலரும் தங்களுக்குக் கிடைக்கும் சிறிது நேரத்தில் கூட அங்கு வந்துவிட்டுப் போகிறார்கள்.நேரம் இருக்கும் பெண்கள் தொடர்ச்சியாக அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் களத்துக்குப் பெண்கள் ஈர்க்கப்பட காந்தியும்,அவர் கைக்கொண்ட வன்முறை கலவாத போராட்ட வழிமுறைகளுமே காரணமாக இருந்தன. அதே போல இப்போது அண்ணாவின் போராட்டமும் பெண்களைத் தன்னிச்சையாக இந்தப் போராட்டக் களத்துக்கு இட்டு வந்திருக்கிறது. நன்றி,

எம்.ஏ.சுசீலா

புது தில்லி

அண்ணா ஹசாரே இணையதளம்

அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே-மீண்டும் ஒரு கடிதம்

அண்ணா ஹசாரே-இன்னொரு கடிதம்

அண்ணா -கடிதங்கள்

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா போராட்டமும் அடித்தள மக்களும்