நான் படித்த முதல் Travelogue தங்களுடைய ‘அருகர்களின் பாதை‘. தங்களுடைய பயணக்கட்டுரைகள் எனக்கு ‘Virtual Travel’ அனுபவத்தை அளிப்பவை. சில வரிகள் என்னை ஆட்கொண்டு அகால நிலைக்கும் தள்ளிவிடும்.
எ.கா –
‘லிங்கத்தின் மீது காலம் துளித்தளியாக சொட்டிக் கொண்டிருந்தது‘
‘ஆயிரமாண்டுகளாக மலைமீது நின்று வயல்களுக்கப்பால் எதையோ நோக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிநாதரின் இளைய மைந்தர்‘
அனைத்தையும் கடந்து தங்கள் பயண பதிவுகள் தற்கால இந்தியாவின் நேர்மையான குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது. அந்த வகையில் இவை பாதுகாக்க வேண்டியவை. அதற்கான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
நன்றி ஜெ.
இப்படிக்கு
ப்ரஷாந்த்
அன்புள்ள பிரஷாந்த்
என்னுடைய பயணக்கட்டுரைகள் பொதுத்தலைப்புகள் கொண்டவை தொடர்ச்சியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதுவரை கீழ்க்கண்ட தொகுதிகள் வெளிவந்துள்ளன.
- இந்தியப்பயணம்
- அருகர்களின் பாதை
- குகைகளின் வழியே
- புல்வெளி தேசம்
ஆனால் பெரும்பாலான பயணக்கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படவில்லை. ஏற்கனவே வெளிவந்த நூல்களும் எவையும் இப்போது வாங்கக் கிடைப்பதில்லை. எதிர்காலத்தில் வெளிவரக்கூடும்.
ஜெயமோகன்