சாகித்ய அக்காதமியின் சிறார் இலக்கியத்திற்கான பாலபுரஸ்கார் விருது யூமா வாசுகிக்கு வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக சிறாருக்கான நூல்களை மொழியாக்கம் செய்துவருகிறார் யூமா வாசுகி. குழந்தைகளுக்காக நித்ய சைதன்ய யதி எழுதிய நூலின் மொழியாக்கம் சின்னச்சின்ன ஞானங்கள் குறிப்பிடத்தக்கது (தன்னறம் வெளியீடு )
இளை இளம்படைப்பாளிக்கான யுவபுரஸ்கார் விருது லோகேஷ் ரகுராமனுக்கு வழங்கப்படுகிறது. லோகேஷ் ரகுராமன் வரும் 23 ஜூன் 2024 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வாசகர்களுடன் உரையாடுவார்
இருவருக்கும் வாழ்த்துக்கள்