குருகு, 14

அன்புள்ள நண்பர்களுக்கு

 குருகு பதினான்காவது இதழ் வெளிவந்துள்ளது. மிழா இசைக் கலைஞரும் சாக்கியார் கூத்து கலைஞருமான கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணியுடனான நேர்காணலின் இரண்டாவது பாகம் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. தமிழ் நிலத்தின் தொன்மையான கதைசொல்லல் வடிவமானசாக்கியார் கூத்துகேரளத்தில் இன்றும் நடைபெற்றுவருகிறது , அது குறித்த உரையாடலாக இந்த நேர்காணல் அமைந்துள்ளது. ஈஸ்வர உண்ணியை நேர்காணல் செய்த அழகிய மணவாளன் சாக்கியார் கூத்து அறிமுகக்கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

 சூழலியல் முன்னோடியான தியோடர் பாஸ்கரன் தமிழக நாடகம், சினிமா ஆகியவற்றின் வரலாறு சார்ந்து நிறையவே எழுதியிருக்கிறார். இந்த இதழில் தமிழக சினிமாவிற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்துதமிழ்நாட்டின் நட்சத்திரஅரசியல்வாதிகள்: தோற்றமும் வளர்ச்சியும்என்ற கட்டுரை தந்துள்ளார்

 சென்ற இதழில் வெளியான ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின்பௌத்த வினாவல்தொடர் புத்தரின் வாழ்க்கையை பற்றி பேசியது. இந்த இதழில் வெளிவந்துள்ள பகுதி தம்மம் குறித்தது. சமீர் ஒகாசாவின் அறிவியல் தொடர் இடம்பெறுகிறது.

சென்ற இதழின் தொடர்ச்சியாக மு. சண்முகம் பிள்ளையின் சங்கத்தமிழ் பாடல்களில் உள்ள வேதக்கடவுளர் குறித்த கட்டுரை வந்துள்ளது

 நன்றி 

 http://www.kurugu.in 

 பிகுகுருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

https://x.com/KuruguTeam/followers

முந்தைய கட்டுரைWhat does the word ‘Hindu’ mean?
அடுத்த கட்டுரைகுமரகுருபரன்: பாந்தியன் சாலை நினைவுகள்:செல்வ புவியரசன்