நாம் சிந்தனை என ஒன்று இங்கே உண்டு என உணரும் வயதில், சுயமாக நாமும் சிந்திக்க முடியும் என நினைக்கும் பருவத்தில் நமக்குக் கிடைக்கும் செய்தி என்பது ‘எதிர்க்கக் கற்றுக்கொள்’ என்பதுதான். எதிர்ப்பே சிந்தனை என நாம் எடுத்துக் கொள்கிறோம். அறிதலின் விளைவாக உருவாகும் எதிர்ப்பு என்பது ஓர் அறிவுநிலைபாடு. அறியாமையின் விளைவான எதிர்ப்பு என்பது அறிவுக்கு எதிரான ஒரு மூர்க்கம். நம் சூழலில் அரசியலியக்கங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுவது அறிவுக்கு எதிரான இந்த எதிர்மனநிலை